15/10/2026
தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலின் த.வெ.க அரசை கண்டித்து கண்டன உரை

  • August 3, 2026
  • 0

டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும், வரும் பட்ஜெட்டில் கூட்டத்தொடரில் வலுவாக பேசுவோம் என எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு தஞ்சாவூரில் தி.மு.க சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் மாநில

உதயநிதி ஸ்டாலின் த.வெ.க அரசை கண்டித்து கண்டன உரை

டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும், வரும் பட்ஜெட்டில் கூட்டத்தொடரில் வலுவாக பேசுவோம் என எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தஞ்சாவூரில் தி.மு.க சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் த.வெ.க அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், ஆடிப்பெருக்கு அன்று காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் . ஆனால் இன்று தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. திமுக ஆட்சியில் காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது . இந்த ஆட்சியில் சரியான நடவடிக்கை இல்லாததால் தண்ணீர் வரவில்லை . இதனால் குறுவைப் பொய்த்து விட்டது. சம்பா சாகுபடி நடைபெறுமா என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் நிர்வாக திறனற்ற டம்மி முதல்வராக விஜய் உள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுபடி ஜூன், ஜூலை மாதங்களில் 42 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் தந்திருக்க வேண்டும். இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட தரவில்லை. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் வாய் திறந்து பேசாமல் மௌனமாக உள்ளார். அவர் எண்ணம் எல்லாம் தி.மு.க தலைவர்கள் மீது என்னென்ன பொய் வழக்கு போடலாம் என சிந்திப்பதிலே உள்ளது . கர்நாடகத்தில் இருப்பது காங்கிரஸ் ஆட்சி. தமிழகத்தில் காங்கிரஸ் உடன் கூட்டணி உள்ள த.வெ.க இது பற்றி கர்நாடக காங்கிரஸ் அரசிடம் கேட்க மாட்டார்கள். அப்படி கேட்டால் நமக்கு உள்ள ஆதரவு போய்விடுமோ என அஞ்சுகிறார்கள்.

இதேபோல் மத்திய அரசை பற்றி பேச வாய் கூட திறக்க மாட்டார்கள். இப்படி எதுவும் பேசாமல் மௌனமாக உள்ள முதலமைச்சர் ரீல்ஸ் போடுவதில் கவனம் செலுத்துகிறார். அவர் மட்டுமல்ல அமைச்சர்கள் , எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவரும் ரீல்ஸ் போடுவதிலேயே அக்கறை காட்டி வருகின்றனர்.

விவசாயிகளின் உரிமையை காப்பாற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். மேலும் அனைத்து கட்சி தலைவர்களும் சேர்ந்து காவிரி உரிமையை நிலைநாட்ட மத்திய அரசை வலியுறுத்துவோம் என கூறினாலும் கேட்பதில்லை.

கர்நாடக முதல்வரை சந்திக்க வேண்டாம் என திமுக தலைவர் மட்டுமல்ல அனைத்து கட்சி தலைவர்களும் கூறினார்கள். ஆனால் முதலமைச்சர் விஜய் கேட்கவில்லை. கர்நாடக முதல்வரை என்னை வந்து பார்க்க வேண்டாம் என கூறிய பிறகுதான் அமைதியாக உள்ளார்.

ஒரு அமைச்சர் இருக்கிறார் பத்திரிகையாளர்களை கண்டாலே தலை தெறிக்க ஓடுவார். வேளாண்துறை அமைச்சரோ பட்ஜெட்டை திருப்பதி கோயில் வைத்து பூஜை செய்து வந்துள்ளார். இப்படி விசிடி , திருட்டு லாட்டரி, பிளாக் டிக்கெட் விற்றவர்கள் எல்லாம் அமைச்சர்கள் ,எம்எல்ஏக்களாக உள்ளனர். இதில் ஒரு படி மேலே அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பள்ளிகளுக்கு சென்று த.வெ.க வாழ்க என மாணவர்களை கூற சொல்லி ரீல்ஸ் போடுகிறார்கள். மருத்துவமனை என் பாத்ரூமில் கூட போய் ரீல்ஸ் போடுகிறார்கள்.

தென்காசி அருகே கொள்முதல் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அந்த மாவட்ட ஆளும் கட்சி மாவட்ட செயலாளர் 4 கேமராக்களுடன் சென்று ரீல்ஸ் போடுகிறார். அமைச்சர் உறவினர்கள் எல்லாம் ஆய்வு செய்கிறார்கள். யார் என்று அதிகாரிகளுக்கு தெரியவில்லை. ஏன் தற்போது அமைச்சர், எம்எல்ஏக்கள் யார் என முதல்வருக்கு கூட தெரியாது.

விவசாயிகளின் கண்ணீரை துடைக்காமல் தியேட்டர்கள் போய் சினிமா பார்த்து அமைச்சர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். இப்படித்தான் இந்த ஆட்சி உள்ளது. இந்த ஆட்சி இந்தியாவில் இதுவரை இல்லாத ஒரு கேவலமான ஆட்சி.
காவிரி ஒழுங்காற்று குழு ஆணைப்படி தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. ஆனால் அதை திசை திருப்பதற்காக த.வெ.க பல்வேறு வேலைகளில் ஈடுபடுகிறது.

இன்று தஞ்சையில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தை திசை திருப்பக் கூட முதல்வர் காஞ்சிபுரம் போய் சென்று ஆய்வு நடத்துகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள மெட்ரோ பாலத்தில் ஏறி ஆய்வு செய்தார். திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் எல்லாம் அவர் ஆய்வு நடத்துகிறார். சொந்தமாக எந்த ஒரு திட்டமும் கொண்டு வரவில்லை. அவர் பாசையிலே கூறுவது என்றால் , ஊரான் வீட்டு நெய்யில் அவர் வீட்டுக்கு ஸ்வீட்ஸ் செய்து வருகிறார்.

தேர்தல் அறிக்கையில் கூறியபடி விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை. தற்போது திமுக தூண்டுதல் பேரில் தான் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தியுள்ளார் . மேலும் விவசாயிகளை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்கவில்லை. விவசாயிகளே நேரில் சென்று முதல்வரை சந்திக்க சென்றால் கோட்டை முன்பு போலீசார் அவர்களை கைது செய்கின்றனர்.

இது தவிர டெல்லியில் போராட்டம் நடத்திய ரெயிலில் புறப்பட்ட விவசாயிகளை மகாராஷ்டிராவில் வைத்து போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இது பற்றி முதல்வர் வாய் திறக்கவில்லை . ஏனென்றால் மகராஷ்டிராவில் ஆளும் கட்சி பாஜக. இப்படி மத்திய அரசுக்கு பயந்து கொண்டே அவர் ஆட்சி நடத்துகிறார்.
குறுவை பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும். மேகதாதுவில் அணைகட்ட ஒருபோதும் அனுமதிக்க கூடாது.

இந்த பிரச்சனைகள் எல்லாம் முதல்வர் அக்கறை காட்ட வேண்டும். இன்னும் இரண்டு நாட்களில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. அதில் கண்டிப்பாக இந்த பிரச்சனை குறித்து வலுவாக பேசுவோம். நாங்கள் சும்மா விடமாட்டோம்.
என்றும் சட்டமன்றம், நீதிமன்றம், மக்கள் மன்றம் என அனைத்து இடங்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக உங்களது குரலாக தி.மு.க என்றைக்கும் பக்கபலமாக இருக்கும். காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டினுடைய உரிமையை என்றைக்கும் நிலைநாட்டுவோம்.

என்று கூறினார், இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கோவி.செழியன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்