கொள்ளையடித்தவர்களை தங்களோடு இணைத்து கொள்ளும் கட்சியாகவும் தவறு செய்தவர்களுக்கு அடைக்கலம் தரும் கட்சியாகவும் த.வெ.க உள்ளது என அதிமுக மாநில விவசாய பிரிவு செயலாளரும், அதிமுக கொறாடாவுமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அதிமுக மாவட்ட செயலாளர் விஜிஎம்.வெங்கடாஜலம் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக மாநில விவசாய பிரிவு செயலாளரும், அதிமுக கொறாடாவுமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ண மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர்
தூய சக்தி, தூய்மையான ஆட்சியை தருவேன் என்று கூறும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கொள்ளையடித்தவர்களை இன்று தங்களது கட்சியில் (த.வெ.க). வில் இணைத்து கொண்டு உள்ளதாகவும், தவறு செய்தவர்களை அடைக்கலம் தந்து கொண்டு உள்ளதாகவும் தெரிவித்தார். இதனைநாட்டு மக்கள் கவனித்து கொண்டு உள்ளதாகவும், எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற இடைத் தேர்தல், மேலும் விரைவில் வரக்கூடிய சட்டமன்ற பொதுத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகுட்டுவார்கள் என்றும்,அவர் தெரிவித்தார்.
மேலும் த.வெ.கவிற்கு சென்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த கேள்விக்கு
25 எம்.எல்.ஏக்களில் 2 1 அ தி மு க எம்.எல்.ஏ க்கள் எடப்பாடியாரிடம் கடிதம் மூலம் நேரடியாக மன்னிப்பு கோரினர் என்றும், மீதமுள்ள ஒரு சிலர் தமிழக வெற்றி கழகத்தோடு ரகசிய கூட்டணி வைத்து தாங்கள் சம்பாதித்த சொத்துக்களை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் தங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்பதற்காகவும் அடைக்கலம் தேடி தமிழக வெற்றி கழகத்திற்கு சென்று விட்டதாகவும், தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் அதிமுக மாநில மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.