14/10/2026
தமிழ்நாடு

என்னுடைய தளபதியால் தான் எனக்கு இந்த அங்கீகாரம் – பால்வள துறை அமைச்சர்

  • July 20, 2026
  • 0

முந்திய திமுக ஆட்சிக்காலத்தில் ஆவின் துறையில் ஊழலா.. முதல்வர் ஒப்புதலுடன் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் சட்டமன்ற தொகுதியில் உள்ள 10 & 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி ஏழை எளிய மாணவர்களுக்கு ஊக்க பரிசு

என்னுடைய தளபதியால் தான் எனக்கு இந்த அங்கீகாரம் – பால்வள துறை அமைச்சர்

முந்திய திமுக ஆட்சிக்காலத்தில் ஆவின் துறையில் ஊழலா.. முதல்வர் ஒப்புதலுடன் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் சட்டமன்ற தொகுதியில் உள்ள 10 & 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி ஏழை எளிய மாணவர்களுக்கு ஊக்க பரிசு வழங்கிய பின் பால்வள துறை அமைச்சர் பேட்டி….

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் அரசு பள்ளியில் பயின்று 10ம் வகுப்பு & 12 ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திருமதி. சி. விஜயலட்சுமி அவர்கள் மாணவர்களின் இல்லத்திற்கே சென்று சால்வை அனிவித்து கேடயம் வழங்கி கல்வி ஊக்கப்பரிசு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் கூறியதாவது

“என்னுடைய தளபதியால் தான் எனக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் அவருடைய முகத்தைப் பார்த்துதான் வாக்கு அளித்துள்ளனர். நான் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு முழுமுதற் காரணம் எங்கள் தலைவர் விஜய் அவர்கள் தான். எனவே, அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு எனது முதல் மாதச் சம்பளப் பணத்தில் இருந்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும், அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்குப் பரிசுப் பெட்டகம் மற்றும் வெள்ளிக்காசுகளையும் வழங்கியுள்ளேன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

விவசாயிகள் தற்பொழுது உள்ள அரசிடம் அணுகுமுறை எப்படி உள்ளது என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு?

அதற்குப் பதிலளித்த அவர், “கடந்த ஆட்சிக்காலத்தில் விவசாயிகளால் தங்களது கோரிக்கைகளைச் சரியாகச் சொல்ல முடியாமல் இருந்தது. ஆனால், தற்போது எங்களை அவர்கள் மிக எளிதாக அணுகுகிறார்கள். நாங்கள் அவர்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் தொடர்ந்து கேட்டு வருகிறோம். விவசாயிகளின் பிரச்சினைகளை ஒவ்வொன்றாகக் கேட்டறிந்து, அவற்றை எங்கள் தலைவர் மற்றும் தலைமை நிர்வாகிகளிடம் கொண்டு சேர்த்து உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறோம்” என்றார்.

ஆவின் பால் கொள்முதலை உயர்த்த முதல்வர் நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லியதை பற்றி கேட்ட பொழுது

“பால் கொள்முதல் உயர்த்த வேண்டும் என்று எங்கள் தலைவர் ஏற்கனவே சொல்லியிருக்கிறார். அதற்கான முதற்கட்ட வேலைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனவே, மிக விரைவில் பால் கொள்முதல் உயர்த்தப்படும்” என்று உறுதியளித்தார்.

சென்ற ஆட்சியில் மின்சாரத் துறையில் ஊழல் நடந்ததை தொடர்ந்து வெள்ளை அறிக்கை விடப்பட்டது அதேபோல் ஆவின் துறையிலும் ஊழல் நடந்துள்ளதா என கேட்ட கேள்விக்கு.

அதை கண்டிப்பாக நாங்கள் தெரிவிப்போம் தலைவர் அனுமதியுடன் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என கூறினார்.