15/10/2026
தமிழ்நாடு

சினிமா சித்தாந்தம் ஆகிவிட்டது என சீமான் குற்றச்சாட்டு

  • July 17, 2026
  • 0

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள முத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரியில் காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசுகையில், இத்தனை நாள்

சினிமா சித்தாந்தம் ஆகிவிட்டது என சீமான் குற்றச்சாட்டு

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள முத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரியில் காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசுகையில்,

இத்தனை நாள் காமராஜரை போல் ஒரு தலைவர் வரமாட்டார்களா இன்று நான் ஏங்கி கொண்டிருந்தேன்.அப்படியே நாட்டு மக்களும் இயங்கிக்கொண்டு உள்ளனர். கடவுளை விமர்சித்தவர்கள் கதாநாயகனை போற்றுகிறார்கள் தற்போது உள்ள அரசியல் சூழல் சினிமாவை சித்தாந்தம் ஆகிவிட்டது.

குறிப்போடு பேசுபவன் தலைவன் அல்ல குறிக்கோளோடு பேசுபவரை நல்ல தலைவன். தனக்கென துணையைக் கூட கட்டாமல் வாழ்ந்தவர் காமராஜ் ஆனால் தற்போது உள்ள தலைவர்கள் துணைக்காகவே வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் கட்டிய அணைகளில் காமராஜர் பெயர் எதிலும் இல்லை. ஆனால் இன்று கழிப்பறை கட்டினாலும் பெயரை சூட்டி வருகின்றனர்.

காமராஜர் முதல்வராக இருந்தபோது தனது வாகனம் சாலையில் சு ட்டும் டிரைவராக இருக்கக்கூடாது நினைத்தவர் ஆனால் சாலைகளை மறைத்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

மாணவர்கள் மாதங்களைத் தாங்க அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் ஆனால் அரசியலை கற்றுக் கொள்ளுங்கள். நான் தோற்றாலும் 20 லட்சம் பேர் போட்டோ க்கள் என்னை ஜெயிக்க வைத்துள்ளார்கள் இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெறுவேன் என்று தெரிவித்தார்.

இது நாள் வரை அரசியல் பேசாத காரணத்தால் இவ்வளவு பெரிய வீழ்ச்சியின் நாம் அடைந்திருக்கிறோம். பெண்ணை கொடுக்க எவ்வளவு யோசிக்கின்ற பொதுமக்கள் மண்ணைக் கொடுக்க யோசிக்க வேண்டாமா

வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் நான்காயிரம் கொடுக்கிறார்கள் அப்போது என்ன வளர்ச்சி இது.இப்போது நான் பேசுவது வேடிக்கையாக இருக்கும் ஆனால் விரைவில் என்னை தேடி வருவீர்கள்.

லஞ்சம் கொடுக்காதீர்கள் என்று சொல்கிறார்கள்., நான் இருந்தால் அரசு பணியில் லஞ்சம் வாங்கியவர்கள் அரசு பணியிலேயே இருக்க மாட்டார்கள்.6 மாதம் கட்டி வீசுகிற உடைகளை பார்த்து பார்த்து வாங்கும் நீங்கள்., 5 வருட கால ஆட்சியை யோசிக்காமல் முடிவு செய்துவிடுகிறார்கள்.நம் நாட்டை பார்த்து தற்போது கேரளா., கர்நாடகா ஆந்திரா எல்லாம் சிரிக்கிற நிலையே தற்போது உள்ளது என்று பேசினார்.

மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சூர்யவம்சம் படம் பாடல் ஒன்றை பாடி தனது உரையை நிறைவு செய்தார். முன்னதாக கல்லூரி வளாகத்தில் உள்ள காமராஜரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.