15/10/2026
தமிழ்நாடு

புதுச்சேரியில் ஊழலில் மொத்த உருவமாக ரங்கசாமி திகழ்கிறார் – நாராயணசாமி

  • July 20, 2026
  • 0

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் ஊழலை படிப்படியாக குறைத்து வருகிறார், ஆனால் புதுச்சேரியில் ஊழலில் மொத்த உருவமாக ரங்கசாமி திகழ்கிறார் என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார் இதுகுறித்து அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்… பிரதமர் மோடி தேர்தல்

புதுச்சேரியில் ஊழலில் மொத்த உருவமாக ரங்கசாமி திகழ்கிறார் – நாராயணசாமி

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் ஊழலை படிப்படியாக குறைத்து வருகிறார், ஆனால் புதுச்சேரியில் ஊழலில் மொத்த உருவமாக ரங்கசாமி திகழ்கிறார் என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்

இதுகுறித்து அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்…

பிரதமர் மோடி தேர்தல் நேரத்தில் நல்ல நிர்வாகத்தை கொடுப்போம் ஊழல் செய்ய விடமாட்டோம் என்று கூறினார் ஆனால் அதற்கு மாறாக புதுச்சேரியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

போலி மருந்து விவகாரத்தில் இதுவரை 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள், தற்போது அந்த விவகாரம் பூதாகரமாகி உள்ளது, புதுச்சேரியில் போலி மருந்து தயாரிக்கப்பட்டு முன்னணி கம்பெனி பெயர்களை அச்சிட்டு இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளது.

போலி மருந்து பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளதால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும், போலி மருந்து விவகாரத்தில் புதுச்சேரி அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்,

காமராஜரோடு ரங்கசாமியை துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் ஒப்பிட்டு பேசி இருப்பது வருந்தத்தக்கது காமராஜர் ஆட்சியில் இருக்கும்போது ரெஸ்ட்ரோ பார்களை திறந்தாரா, பள்ளி கல்லூரி அருகில் மதுபான கடைகளை திறந்தாரா, என்று கேள்வி எழுப்பிய அவர் மதுவிலக்கு கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்று குறிப்பிட்டார்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தயவு செய்து கண்ணாடியை கழற்றி பார்க்க வேண்டும், அவர் போட்டிருக்கும் கண்ணாடியில் ஏதோ கோளாறு இருக்கிறது என்று விமர்சனம் செய்த நாராயணசாமி காமராஜர் மக்களுக்காக உழைத்தவர் கரை படாத கரம் கொண்டவர் என்று குறிப்பிட்ட அவர் காமராஜரை ரங்கசாமியோடு ஒப்பிட்டு பேசி காமராஜர் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார்.

தமிழக முதலமைச்சர் விஜய்யை பார்த்தாவது புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும், ஊழலில் ஈடுபடும் அமைச்சர்களின் பதவியை பறிப்பேன் என்று தமிழக முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை விடுக்கிறார், புதுச்சேரியில் அமைச்சர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ, அல்லது அதிகாரிகளோ ஊழல் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்வதற்கு முதலமைச்சர் ரங்கசாமி தயாரா என்று கேள்வி எழுப்பினார்.

ஆனால் அதற்கு மாறாக ஊழலை ரங்கசாமி ஊக்குவிக்கிறார் அதில் ஒரு அங்கமாக இருக்கிறார் ஊழலின் மொத்த உருவமாக முதலமைச்சர் ரங்கசாமி திகழ்த்தவும் விமர்சித்தார்.

தமிழகத்தில் முதலமைச்சர் விஜயின் ஆட்சியை மக்கள் பாராட்டி வருகிறார்கள் தமிழகத்தில் படிப்படியாக ஊழல் குறைக்கப்பட்டு வருகிறது தமிழகத்தை பார்த்தாவது ரங்கசாமி திருந்த வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர் ஊழலை ஒழிப்பதற்கான முயற்சியை எடுத்து வரும் முதலமைச்சர் விஜயை பாராட்டுவதாக குறிப்பிட்டார்.

காமராஜர் போன்று சட்டை போட்டுக் கொண்டிருந்தால் போதாது செயல்பாடு இருக்க வேண்டும் என்றும் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது என்பது எந்த கட்சியாக இருந்தாலும் அது தவறு என்றும் சுட்டிக்காட்டினார்.