தூய்மை பணியாளர் உடன் இணைந்து சாக்கடை கால்வாயை சுத்தம் செய்த அமைச்சர் விக்னேஷ்…
கோவை குறிச்சி அருகே இன்று தூய்மை பணியாளர்களுடன் இணைந்து சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் கே விக்னேஷ் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தலை வழங்கினார்.
அமைச்சரின் பணியை கண்டு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குறிச்சி பகுதியில் நீண்ட வருடங்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதால் நோய் தொற்று அபாயம் ஏற்படுவதாகவும் கொசுக்கள் அதிகம் வருவதால் டெங்கு காய்ச்சல் ஏற்படுவதாக நேற்று நடைபெற்ற குறை தீர்ப்பு முகாமில் அமைச்சர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை குறிச்சி பகுதியில் அமைச்சர் திடீர் கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது தூய்மை பணியாளர்கள் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யும்போது அவர்களுடன் இணைந்து அமைச்சர் விக்னேஷும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார் அப்போது பேசியவர் எப்படி இந்த உபகரங்களை வைத்து சுத்தம் செய்கிறீர்கள் மிகவும் சிரமமாக இல்லையா என கேள்வி எழுப்பினார்.
மேலும் சாக்கடை கால்வாயில் மூன்றடி வரை மணல் தேங்கி இருப்பதை ஏன் எடுக்க முடியவில்லை அதை எப்படி அகற்ற முடியும் என அதிகாரியிடம் கலந்துரையாடி உடனடியாக அதற்கு தீர்வு காண உத்தரவிட்டார்.