16/10/2026
தமிழ்நாடு

தவெகவுக்கு யார் உடைய அழுத்தம் காரணமாக செல்லவில்லை – எம் ஆர் விஜயபாஸ்கர்

  • July 13, 2026
  • 0

தவெகவுக்கு யார் உடைய அழுத்தம் காரணமாக செல்லவில்லை, நான் என்னுடைய சுயமான விருப்பம் நிர்வாகிகளுடைய விருப்பத்தால் மட்டுமே தான் தவெகவில் இணைந்துள்ளோம் – என முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி. கரூர் மாநகராட்சி ஆணையரிடம்

தவெகவுக்கு யார் உடைய அழுத்தம் காரணமாக செல்லவில்லை – எம் ஆர் விஜயபாஸ்கர்

தவெகவுக்கு யார் உடைய அழுத்தம் காரணமாக செல்லவில்லை, நான் என்னுடைய சுயமான விருப்பம் நிர்வாகிகளுடைய விருப்பத்தால் மட்டுமே தான் தவெகவில் இணைந்துள்ளோம் – என முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி.

கரூர் மாநகராட்சி ஆணையரிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பழைய அமராவதி நடைப்பயிற்சி பாலத்தை மீண்டும் திறக்க வேண்டும் என மனு அளித்தார் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது.

கரூர் பழைய அமராவதி ஆற்றுப்பாலத்தில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக நடைப்பயருக்கு செல்வதற்காக முன்னாள் அமைச்சராக இருந்த பொழுது செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

KVB வங்கியில் சி எஸ் ஆர் நிதியில் நடைபயிற்சி பாலமாக கொண்டுவரப்பட்டது அதில் பூங்கா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

20 ஆண்டுகளுக்கு பராமரிப்பு செய்வதாக KVB வங்கி தெரிவித்த நிலையில்

தற்பொழுது KVB வங்கி கைவிடுவதாக அறிவித்துவிட்டது இந்த நிலையில் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளோம். டி என் பி எல் காகித ஆலை மற்றும் KVB வங்கியிடம் இது தொடர்பாக தெரிவித்துள்ளோம்.

அதுவரை அந்தப் பாலத்தை மாநகராட்சி நிர்வாகம் திறக்க ஏற்பாடு செய்து பராமரிக்க வேண்டும்.

அதிமுகவின் மேல் உள்ள அதிருப்தி காரணமாக தான் தவெகவில் இணைந்துள்ளோம், இதேபோல் பல்வேறு நிர்வாகிகள் இணைந்துள்ளனர். தவெக மற்றும் யார் உடைய அழுத்தம் காரணமாக செல்லவில்லை, நான் என்னுடைய சுயமான விருப்பம் நிர்வாகிகளுடைய விருப்பத்தால் மட்டுமே தான் தவெகவில் இணைந்துள்ளோம்.

கோவில் நிலம் விவகாரம்: கடந்த ஆட்சியில் வேண்டும் என்று பிரச்சினை செய்தார்கள் குறிப்பாக வெண்ணெய் மலை 0 சதவீதமாக மற்றி உள்ளனர். தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் இடம் கோவில் நிலம் விவகாரம் குறித்து, குழு அமைத்து சட்டப்படி நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்,

மகாபலிபுரத்தில் இணைப்பு விழாவில் நான் பேசியதை குதிரை பேரம் என தவறாக சித்தரித்துள்ளனர்.