16/10/2026
தமிழ்நாடு

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைச்சர் திடீர் விசிட்..!

  • July 10, 2026
  • 0

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் கே. ஜி அருண்ராஜ் திடீர் ஆய்வு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சுகாதாரத் துறை அமைச்சர் கே.ஜி அருண்ராஜ் இன்று காலை 9.00 மணி அளவில் மருத்துவமனைக்கு

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைச்சர் திடீர் விசிட்..!

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் கே. ஜி அருண்ராஜ் திடீர் ஆய்வு

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சுகாதாரத் துறை அமைச்சர் கே.ஜி அருண்ராஜ் இன்று காலை 9.00 மணி அளவில் மருத்துவமனைக்கு வருகை புரிந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்

இந்த ஆய்வில் புறநோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, பிரசவ அறை, அறுவை சிகிச்சை மையம், கழிவறை உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டதுடன் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும்,மருந்துகள் இருப்பு குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் சிகிச்சைக்காக வந்திருந்த பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார் மேலும் அங்குள்ள 2ம் தளத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்று பார்வையிட்ட அவர் கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதில் கரூர் மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன், கரூர் மருத்துவ இணை இயக்குனர் பாரதி மோகன், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.