15/10/2026
தமிழ்நாடு

விதிமுறைகளுக்கு உட்பட்டு மட்டுமே ஆய்வுகள் நடத்தனும் – இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்

  • July 9, 2026
  • 0

கரூரில் கடந்த ஆண்டு கூட்ட நெரிசலில் சிக்கி பலியான குடும்ப உறுப்பினர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு உதவி செய்வதை வரவேற்கிறோம்… ஆனால் அரசு வேலை தருவது என்பதை கொள்கை முடிவுடன் திட்டமிட்டு வழிகாட்டு நெறிமுறைகள் அமைத்து செய்ய

விதிமுறைகளுக்கு உட்பட்டு மட்டுமே ஆய்வுகள் நடத்தனும் – இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்

கரூரில் கடந்த ஆண்டு கூட்ட நெரிசலில் சிக்கி பலியான குடும்ப உறுப்பினர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு உதவி செய்வதை வரவேற்கிறோம்… ஆனால் அரசு வேலை தருவது என்பதை கொள்கை முடிவுடன் திட்டமிட்டு வழிகாட்டு நெறிமுறைகள் அமைத்து செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் பேட்டி

கரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் பேட்டி அளித்தார்

கரூரில் கடந்த ஆண்டு கூட்ட நெரிசலில் சிக்கி பலியான குடும்ப உறுப்பினர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு உதவி செய்வதை வரவேற்கிறோம்… ஆனால் அரசு வேலை தருவது என்பதை கொள்கை முடிவுடன் திட்டமிட்டு வழிகாட்டு நெறிமுறைகள் அமைத்து செய்ய வேண்டும்

காவிரி விவகாரத்தில் பல கட்ட பேச்சுவார்த்தைகள், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் ஏற்கனவே உள்ள நிலையில், கர்நாடக அரசு அவற்றை மதித்து செயல்பட வேண்டும் என்றும், தமிழ்நாட்டிற்கு உரிய நீரை வழங்க வேண்டும் என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.

அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறைகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் குறித்து பேசிய அவர், சட்டத்தில் உள்ள நடைமுறைகளுக்கு உட்பட்டே ஆய்வுகள் நடைபெற வேண்டும் என்றார். அரசு மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகள், நோயாளிகளுக்கான சிகிச்சை, மருத்துவ வசதிகள் போன்றவற்றை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் ஆய்வு செய்து குறைகளை கண்டறியலாம் என்றார். அதேபோல் சிறைகளிலும் கைதிகளின் மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் ஊதியம் உள்ளிட்ட அம்சங்களை சட்டப்படி ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உரிய அதிகாரம் உள்ளதாக தெரிவித்தார்.

எவ்வளவு உயர்ந்த பதவியில் இருப்பவராக இருந்தாலும், விதிமுறைகளை மீறி கல்வி நிறுவனங்கள் அல்லது பிற அரசு அமைப்புகளுக்குள் நுழைந்து ஆய்வு மேற்கொள்வது சரியல்ல என்றும், விளம்பர நோக்கத்திற்காக குழந்தைகளிடம் வேறு மொழியில் கேள்விகள் கேட்டு அதை பரப்புவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்றும் அவர் விமர்சித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்னவெனில், ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய இடங்களில், சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு மட்டுமே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே என எம். வீரபாண்டியன் தெரிவித்தார்.