15/10/2026
தமிழ்நாடு

முதல்வர் விஜய் ரோடு ஷோ செல்ல திட்டம்..! அமைச்சர்கள் நேரில் ஆய்வு

  • July 9, 2026
  • 0

கரூரில் அரசு மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் முதல்வர் விஜய் ரோடு ஷோ செல்ல திட்டம் – மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்தில் அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர். 6700 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்

முதல்வர் விஜய் ரோடு ஷோ செல்ல திட்டம்..! அமைச்சர்கள் நேரில் ஆய்வு

கரூரில் அரசு மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் முதல்வர் விஜய் ரோடு ஷோ செல்ல திட்டம் – மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்தில் அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர். 6700 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உள்ளனர்.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நாளை வெண்ணைமலை அட்லஸ் கலையரங்க மைதானத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி ஆகியோர் விழா மேடையை ஆய்வு செய்தனர்.

இதில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர் சத்யா மற்றும் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். மக்கள் சந்திப்பு கூட்டத்தில் 5,000 நபர்களுக்கு QR கோடு உடன் கூடிய அடையாள அட்டை வழங்கி பங்கேற்கும் நபர்கள் குறித்தும் அமைச்சர்கள் கேட்டிருந்தனர்

நாளை மதியம் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்க செல்லும் முதல்வர் திருக்காம்புலியூர் ரவுண்டானா, பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா, உழவர் சந்தை, லைட்ஹவுஸ் கார்னர், திருமாநிலையூரில் ரவுண்டானா, சுங்ககேட், தாந்தோன்றிமலை வழியாக ரோடு ஷோ செல்கிறார்.

கரூர் மாநகர பகுதியில் சாலையின் இரு புறமும் தடுப்புகள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பணிக்காக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 6700க்கும் மேலான போலீசார் ஈடுபட உள்ளனர்.