15/10/2026
தமிழ்நாடு

முதல்வர் விஜய் தனது ரசிகர்களை மகிழ்விக்க மட்டுமே மேடை பேச்சு – சிவசங்கர்

  • July 16, 2026
  • 0

முதல்வர் விஜய் தனது ரசிகர்களை மகிழ்விக்க மட்டுமே மேடை பேச்சு பேசிவருகிறார் தவிர பொதுமக்களுக்காக எதுவும் பேசுவதாக தெரியவில்லை. கடந்த ஆட்சியில் சாரி சொல்லாதீங்க நீதி கொடுங்க என பேசிய தற்போதைய முதல்வர் லாக்கப் மரணம் குறித்து வாய்திறக்காமல்

முதல்வர் விஜய் தனது ரசிகர்களை மகிழ்விக்க மட்டுமே மேடை பேச்சு – சிவசங்கர்

முதல்வர் விஜய் தனது ரசிகர்களை மகிழ்விக்க மட்டுமே மேடை பேச்சு பேசிவருகிறார் தவிர பொதுமக்களுக்காக எதுவும் பேசுவதாக தெரியவில்லை. கடந்த ஆட்சியில் சாரி சொல்லாதீங்க நீதி கொடுங்க என பேசிய தற்போதைய முதல்வர் லாக்கப் மரணம் குறித்து வாய்திறக்காமல் இருப்பது வேடிக்கை என்று குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான சா.சி.சிவசங்கர் பேட்டி;

பெரம்பலூர் மாவட்டம்  குன்னம் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் சா.சி.சிவசங்கர் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளின் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் தமிழகத்தில் விஜயின் ஆட்சி அமைந்ததே ஒரு மோசமான சூழலாக உள்ளது என தெரிவித்த அவர் ஏற்கெனவே சிறப்பாக செயல்பட்ட திமுக அதிமுகவின் திட்டங்களை தங்களது திட்டங்களைப் போல தவெக அரசு ஸ்டிக்கர் ஒட்டி கொள்கிறது  என விமர்சனம் செய்தார் மேலும், அதிமுகவை குறிவைத்து கட்சியை கைப்பற்ற முயலும் தவெக அரசு அதற்காக அச்சுறுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து அதிமுக ஆட்சியின் மருத்துவ படிப்புக்காக 7.5% இடஒதுக்கீடு திமுகவின் வேளாண் உள்ளிட்ட பல்வேறு உயர்கல்வி படிப்புகளுக்கான இடஒதுக்கீடுகளை தவெக வழங்கியதைப் போன்று தற்போது பணியாளர்களுக்கு ஆணையை வழங்கியுள்ளது என விமர்சித்தார். கரூரில் முதல்வர் வழங்கிய அரசு  பணி ஆணை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் பாமக அன்புமணி ராமதாஸ் எழுப்பியுள்ள கட்சி கூட்ட நெறிசலால் உயிரிழந்த பாமகவினருக்கும் அரசு பணி வழங்க கோரிய கருத்திற்கு இனி இதுபோன்ற பல்வேறு கருத்துகளும் வலுக்கும் என தெரிவித்தார்.

தொடர்ந்து அண்ணாமலையின் புதிய கட்சி தொடக்கம் என்பது பாஜகவால் நேரடியாக கால் ஊன்ற முடியாத தமிழகத்தில் B, C  மற்றும் D போன்ற அதன் அடுத்த அமைப்பாகவே செயல்படும் என விமர்சித்தார். மேலும்  அமைச்சரவையில் இடம்பெறுமா இடதுசாரி என்ற எதிர்பார்ப்புக்கு அவர்கள் திமுகவுடன் இருந்த இனக்கம் போல் தவெகவுடன் இல்லை அவர்கள் எதிர்பார்த்த ஆட்சியாகவும் தவெக இல்லை என தெரிவித்தார். தொடர்ந்து விசிக திருமாவளவனின் இருதுருவ போட்டி கருத்து என்பது விஜயின் திமுக தவெக போட்டி என்கின்ற கருத்தையே அவரும் தெரிவிப்பதாக கூறினார்.

மக்களுக்கான பிரட்சனையின் போது கடந்த ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்வர் பாதிப்புகளுக்கான கருத்துக்களையும் வருத்தத்தையும் தெரிவித்தார். ஆனால் தற்போதைய முதல்வர் அப்படி அல்ல ரசிகர்களுக்காக மட்டும் மேடையேறி தன் கருத்தை மட்டுமே பேசும் ஒருவராக உள்ளாரே தவிர மக்களுக்கான கருத்துக்களை அவர் பேசுவது இல்லை. அன்மையில் நிகழ்ந்த லாக்கப் மணரம் தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல் முதல்வர் மௌனமாக மட்டுமே இருக்கிறார். கடந்த திமுக ஆட்சியில் நடந்த இது போன்ற சம்பவங்களுக்கு சாரி சொல்லாதீங்க CM சார் நீதி கொடுங்க என கேட்ட விஜய் , தற்போது மௌனம் காப்பது வேடிக்கையாக உள்ளது என சாடினார்.