திருச்செந்தூர் முருகன் கோவில் சண்முகிலாச மண்டபய் இரும்பு கிரில் கேட் அகற்றக்கோரி நடக்க இருந்த போராட்டம் ஒத்திவைப்பு என அனிதா ராதாகிருஷ்ணன் எம் எல் ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்..
திமுகவின் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது..
திருச்செந்தூர் முருகன் கோவில் சண்முக விலாசம் மண்டபம் முன்பு அமைக்கப்பட்ட இரும்பு கிரில் கேட்டை அகற்றக் கூறியும் திருச்செந்தூர் உள்ளூர் பக்தர்களை இலவசமாக தரிசனத்திற்கு அனுமதிக்க கோரியும், உள்ளூர் பக்தர்களுக்கு அடையாள அட்டை வழங்கி தரிசனத்திற்கு அனுமதிக்க கோரி அனிதா ராதாகிருஷ்ணன் எம் எல் ஏ தலைமையில் திருச்செந்தூர் முருகன் கோவில் சண்முகாஸ் மண்டபம் முன்பு 22ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் இன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மாவட்ட ஆட்சியர் கோவிலில் ஆய்வு செய்து 10 நாட்களில் இது குறித்தான அறிக்கையை தாக்கல் செய்து கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.