15/10/2026
தமிழ்நாடு

அன்புமணிக்கு தலைமை தாங்கும் தகுதி இல்லை -பாமக, இரா அருள்

  • July 16, 2026
  • 0

அன்புமணிக்கு தலைமை தாங்கும் தகுதி இல்லைஅவரை தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டோம்அந்த குடும்பத்தில் ஒருவர் ஒருபோதும் தலைவராக முடியாது அந்த தலைமையை நாங்கள் ஏற்க மாட்டோம் அந்த தகுதி அவருக்கு இல்லை கொள்கிறேன். அன்புமணிக்கு தலைமை தாங்கும் தகுதி

அன்புமணிக்கு தலைமை தாங்கும் தகுதி இல்லை -பாமக, இரா அருள்

அன்புமணிக்கு தலைமை தாங்கும் தகுதி இல்லைஅவரை தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டோம்அந்த குடும்பத்தில் ஒருவர் ஒருபோதும் தலைவராக முடியாது அந்த தலைமையை நாங்கள் ஏற்க மாட்டோம் அந்த தகுதி அவருக்கு இல்லை கொள்கிறேன். அன்புமணிக்கு தலைமை தாங்கும் தகுதி இல்லை அவரை தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டோம். அந்த குடும்பத்தில் ஒருவர் ஒருபோதும் தலைவராக முடியாது. அந்த தலைமையை நாங்கள் ஏற்க மாட்டோம் அந்த தகுதி அவருக்கு இல்ல.

சேலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் பேச்சு;

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அணியில் இருந்த அருள் பாட்டாளி மக்கள் கட்சி ஒன்று சேர்ந்த பின்னர் டாக்டர் ராமதாஸ் கருத்து ஏதும் தெரிவிக்காததால் தற்போது மேற்கொண்டு என்ன முடிவு எடுப்பது என கருத்து கேட்டு வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் இரா அருள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் தொண்டர்கள் வந்திருந்தனர்.

காடுவெட்டி குரு புகைப்படத்துடன் பிளக்ஸ் பேனர் வைத்து ஒன்றுபடுவோம் ஒருங்கிணைப் போம் வழிகாட்ட வாருங்கள் என தலைப்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய பலரும் தனி கட்சி தொடங்க வேண்டும் என்றும் இருந்தனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதன் விவரம் வருமாறு;

1 )அரசியல் வட்டாரங்களில் இளைஞர்கள் தான் எதிர்கால தலைவர்கள்,ஜனநாயகத்தின் வாரிசுகள் மற்றும் அடுத்த தலைமுறை வாக்காளர்கள் என்பதால் அந்த இளைஞர்களை நல்வழி காட்டத்தக்க வகையில் அரசும் அரசியல் கட்சிகளும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

2) சோனம் வாங்சுக் உண்ணா நிலை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதோடு அவரது உயிரை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

3)ஏழ்மை நிலையில் இருந்து முன்னேற வேண்டும் என்பதற்காக அரசு ஒதுக்கீடு தனியார் பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி கலை அறிவியல் கல்லூரிகளில் படிப்பதற்கு கல்வி கடன் வாங்கிய மாணவர்கள் அனைவரின் கல்வி கடனையும் உடனடியாக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

4)11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மிகப்பெரும் மாவட்டமாக சேலம் மாவட்டம் இருக்கின்ற காரணத்தால் சேலம் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக மூன்றாகப் பிரித்திட வேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்கிறோம்.

5)தமிழகம் சட்ட போராட்டத்தின் மூலமும் மக்கள் போராட்டத்தின் மூலமும் பெற்ற காவிரி நீர் உரிமையை பறிக்கின்ற வகையில் கர்நாடகா மேகதாதுவில் கட்ட துடிக்கின்ற ஆணையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக போராடிய விவசாயிகளை இந்த கூட்டம் வாழ்த்துகிறது. மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது என்று மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் சிறப்புரையாற்றி பேசியதாவது;

எனக்கு கடவுள் ஐயா அவர்கள் தான் இன்றைக்கு அவர் தான் கடவுள் ஆலைக்கும் அவர்தான் கடவுள் இந்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. 89 ஆம் ஆண்டில் இருந்து அவர்தான் தலைவராக இருந்தார். 37 ஆண்டுகள் உங்களுக்காக உழைத்திருக்கிறோம்.

உங்கள் வீட்டை அடிக்க வந்தார்கள் நான் சேலத்தில் இருந்து பத்து பையன்களை அழைத்துச் சென்று காத்தேன் இது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா அன்று இருந்த அன்புமணி வேறு இன்று இருக்கும் அன்பு மணி பேரு இது வரலாறு. ஐயா கூட்டத்தில் மைக்கை தூக்கி போட்டீர்கள். மேடையில் உங்களுக்கும் ஐயா அவர்களுக்கும் வார்த்தை போர் ஏற்பட்டது. இப்போது சேர்ந்திருக்கிறீர்கள் இது சந்தோஷம் அளிக்கிறது.

அன்புமணி பலமுறை அழைத்தார் நான் செல்லவில்லை…உங்களோடு இருந்தது தான் ஒரு பிரச்சனை.

நான் உங்களுடன் இருந்தது தவறா? ஜிகே மணி பலமுறை அன்புமணியுடன் சென்று வாருங்கள் என அழைத்தார் ஆனால் வரவில்லை ஆனால் இப்போது சேர்ந்திருக்கிறீர்கள் மொத்தத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சிதான்.

5.2சதவீதமாக ஆக இருந்த வாக்கு ஒவ்வொருத்தரிடம்ஒவ்வொருத்தரிடமும்சதவீதத்தை 2.1 சதவீதமாக மாறி இருக்கிறது. 37 ஆண்டுகள் முடிந்து விட்டது நான் 18 முறை சிறை சென்று இருக்கிறேன். உங்களது மவுனம் புரியவில்லை, ஐயா எழுதிக் கொடுத்ததை தான் நாங்கள் பேசணும் இது தவறா 21 உயிர்களை பழி கொடுத்து இட ஒதுக்கீடு பெற்று கொடுத்தீர்கள்.

கட்சியை உருவாக்கியவர் ஐயா அவர்கள் உங்களை மத்திய அமைச்சராக்கியவர் ஐயா அவர்கள் அவரோடு நாங்கள் இருந்ததால் இப்போது எங்களை சாக்கடை என கூறுகிறார்கள்.

ஒவ்வொருவரிடமும் கருத்து கேட்க விரும்பினோம் அதனால்தான் இந்த கூட்டம் கூட்டப்பட்டது உங்களது கருத்தை பேப்பரில் எழுதி தாருங்கள் பின்னர் முடிவெடுத்துக் கொள்ளலாம்நமக்கு நல்ல வழி கிடைக்கும்நான் ஒரு வழியை தேர்ந்தெடுத்து சென்று விட்டால் எனக்கு தொல்லை இல்லை37 ஆண்டுகள் ஒரே பாதையில் சென்று விட்டு இப்போது புதிய பாதையையும் புதிய தலைமையும் தேடலாமா அல்லது நீங்கள் வேறு வழி சொன்னால் அதன்படி நடக்கலாம் நீங்கள் எழுதி தரும் சீட்டை வைத்து நான் முடிவு செய்ய இருக்கிறேன்.

உங்களிடம் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் சீட்டை சீட்டில் எழுதி தாருங்கள் கலந்து பேசி ஆய்வு செய்து முடிவு எடுப்போம் ஆனால் ஒன்று மட்டும் கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புமணிக்கு தலைமை தாங்கும் தகுதி இல்லைஅவரை தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டோம்அந்த குடும்பத்தில் ஒருவர் ஒருபோதும் தலைவராக முடியாது .அந்த தலைமையை நாங்கள் ஏற்க மாட்டோம் அந்த தகுதி அவருக்கு இல்லை, இவ்வாறு இரா அருள் சிறப்புரையாற்றினார்.