சினிமா

பிரேம்ஜியின் கடைசி பேச்சிலர் பார்ட்டி… வைரலாகும் புகைப்படம்

  • June 8, 2024
  • 0

இசையமைப்பாளர், பாடகர்,நடிகர் என பல திறமைகளுடம் தமிழ் சினிமாவில் வலம் வருபவர் பிரேம்ஜி. இவர் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிள் என்று மக்கள் மத்தியிலும், திரைப்படங்களிலும் சொல்லி வந்தார், இவரது அண்ணன் வெங்கட் பிரபு தயாரிக்கும் அனைத்து படத்திலும்

பிரேம்ஜியின் கடைசி பேச்சிலர் பார்ட்டி… வைரலாகும் புகைப்படம்

இசையமைப்பாளர், பாடகர்,நடிகர் என பல திறமைகளுடம் தமிழ் சினிமாவில் வலம் வருபவர் பிரேம்ஜி. இவர் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிள் என்று மக்கள் மத்தியிலும், திரைப்படங்களிலும் சொல்லி வந்தார், இவரது அண்ணன் வெங்கட் பிரபு தயாரிக்கும் அனைத்து படத்திலும் இவர் நடித்திருப்பார், அல்லது இசையமைத்திருப்பார், தற்போதும் கூட விஜயின் கோட் படத்திலும் நடித்துள்ளார்.

இது ஒரு புறம் இருக்க பிரேம்ஜியை பொதுமேடைகளில் பார்க்கும் போது அனைவரும் அவரிடம் எப்போது திருமணம் செய்துக்கொள்ள போகிறீர்கள் என பலரும் கேட்டுக் கொண்டு வந்தனர். அதற்கு பதில் தற்போது கிடைத்துள்ளது.

இதற்கு முன் பிரேம்ஜி திருமணம் பற்றி பல வதந்திகள் வந்தாலும், 40 வயதை தாண்டிய முரட்டு சிங்கிளாக வலம் வந்தார். தற்போது அண்மையில் இந்து என்கிற பெண்ணோடு திருமணம் நடைபெற உள்ளதாக பத்திரிக்கை ஒன்று வெளியானது.

இதுவும் வதந்தி என்று நம்பிய ரசிகர்களுக்கு, இயக்குனர் வெங்கட் பிரபு இது வதந்தி இல்ல உண்மை என்று உறுதிப்படுத்தியுள்ளார். இவரின் திருமணம் ஜூன்9ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாக வெங்கட் பிரபு கூறியுள்ளார். இதனால் அடித்து புடித்து தனது நண்பர்களுடன் பேச்சிலர் பார்ட்டி வைத்து கெத்து காட்டியுள்ளார். இந்த பார்டியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். அப்போது எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.