அரசியல் இந்தியா சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு

PenPoint Fact check: பெண் துறவி தாக்குதல் நாடகம் என பரவும் செய்தி உண்மையா?

  • April 1, 2024
  • 0

பெண் துறவி சப்ரா பதக் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளிவந்த செய்தி உண்மைதான். அது ஜோடிக்கப்பட்ட வழக்கு அல்ல என்பதை பரமக்குடி காவல்துறை நேரடியாக உறுதி செய்துள்ளது.

PenPoint Fact check: பெண் துறவி தாக்குதல் நாடகம் என பரவும் செய்தி உண்மையா?

தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்தித்துணுக்கை கீழ்க்கண்ட செய்தியுடன் பரப்பி வருகின்றனர். “Fwd msg. ஷிப்ரா பாதக் எனும் பெண் துறவி, கடந்த நவம்பர் மாதம் அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு பாதயாத்திரை புறப்பட்டார். பல மாநிலங்கள் வழியாக பயணித்து,தமிழகத்தை அடைந்தார். பரமக்குடி அருகே அவர் வந்தபோது அவரை சிலர் இன்று (09.03.24) தாக்கியுள்ளனர், வாகனத்தை சேதப்படுத்தியுள்ளனர்.
இங்கே ராமருக்கு இடமில்லை, நீ அயோத்தி திரும்பு என மிரட்டியுள்ளனர்.”

https://www.facebook.com/photo/?fbid=431573969398423

நடந்தது என்ன?

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சப்ரா பதக். தனது தந்தை மற்றும் சகோதரர் உடன் அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு யாத்திரை மேற்கொண்டார். கடந்த வெள்ளிக்கிழமை பரமக்குடி வந்த போது, சிலர் அவர்களை வழிமறித்து கற்களைக் கொண்டு தாக்கி காரை சேதப்படுத்தியதாக புகார் அளித்தார்.

கோ பேக் ராமர்… சப்ரா பதக் சொன்னது என்ன?

பின்னர் இரவில் பரமக்குடியில் தங்கிவிட்டு, சனிக்கிழமை காலை 6 மணியளவில் அங்கிருந்து சத்திரக்குடி வழியாக ராமேசுவரம் நோக்கி பெண் துறவி ஷிப்ரா பதக் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அவருக்கு பின்னால் அவருடைய தந்தை மற்றும் சகோதரர் காரில் வந்து கொண்டிருந்தார்களாம். அப்போது அந்த வழியாக மற்றொரு காரில் வந்த 6 பேர், திடீரென அவர்களை வழிமறித்து வாக்குவாதம் செய்தார்களாம். 4 மேலும் அந்த நபர்கள் ராமர் குறித்து சர்ச்சையாக பேசியும், ‘கோ பேக் ராமர்’ என்றும் கோஷமிட்டார்களாம். பெண் துறவியின் கார் கண்ணாடியை உடைத்ததுடன், காரில் கட்டப்பட்டிருந்த ராமர் கொடியை சேதப்படுத்தியதாகவும் அந்த பெண் துறவி குற்றம்சாட்டினார். மேலும் இந்த சம்பவத்தில் பெண் துறவி ஷிப்ரா பதக் தனது கையில் கண்ணாடி சிதறல்கள் பட்டு லேசான காயம் ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

காவல்துறை செய்தது என்ன?

இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டார். அப்போது, பெண் துறவியின் சகோதரர் சாலையில் உள்ள கற்களை சேகரித்து காருக்குள் வைக்கும் காட்சி பதிவாகியிருந்தது.

இதையடுத்து, வீண் வதந்தியை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட பெண் துறவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், இதை அறிந்துகொண்ட துறவி, தனது குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமையே சொந்த ஊர் திரும்பிவிட்டார்.

சப்ரா செய்தியாளர்களிடம் பேசியது என்ன?

இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பெண் துறவி ஷிப்ரா பதக், அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் வரை ஆன்மிக பயணம் மேற்கொண்டதாகவும், காடுகள், நதிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் கூறினார். ராமேஸ்வரத்தில் தனது யாத்திரையை நிறைவு செய்ய வந்திருந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பரவி சர்ச்சை வெடித்தது. இதையடுத்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார், உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து வந்த பெண் துறவி ஷிப்ரா பதக் அளித்த புகார் பொய்யானது என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து பெண் துறவி மீது பரமக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.