செப்டம்பர் 4ம் தேதி ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் மாநாடு அரசியல் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்த கோவிலில் சிறப்பு வழிபாடு – அய்யப்பன்
ஆடி முதல் வெள்ளிக்கிழமையான இன்று திருமங்கலம் வேங்கட சமுத்திரம்.பகுதியில் உள்ள காட்டுப் பத்திரகாளியம்மன் திருக்கோவிலில்இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது முத்தங்கி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்த நிலையில் ஆடி முதல் வெள்ளியான இன்று செப்டம்பர் 4ம் தேதி ஓபிஎஸ் தலைமையில் மதுரையில் நடைபெறும் மாநாடு வெற்றி பெறவும் 2026 தேர்தலில் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டுமென ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏவான அய்யப்பன் சிறப்பு வழிபாடுசெய்தார்.தொடர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு எம்எல்ஏ அய்யப்பன் அன்னதானம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்.
அதிமுக தொண்டர்கள் மீட்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில் 2026 ல் ஒபிஎஸ் தலைமையில் ஆட்சியை அமைக்க வேண்டும் உயர்ந்த நோக்கத்தில் அம்மனுக்கு அபிஷேகம் செய்துள்ளோம் செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெறுகின்ற ஒருங்கிணைப்பு மாநாடு தமிழ்நாட்டின் அரசியலை நிர்ணயிக்க வேண்டும்அதோடு மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் ஓபிஎஸ் தலைமையில் 2026 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அம்மாவின் கனவை நிறைவேற்றும் வகையில் ஆட்சி அமைக்கப்படும் என்றார்.
தொடர்ந்து அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என எடப்பாடி யார் கூறுவது குறித்த கேள்விக்கு எடப்பாடி யார் என்ன மனநிலையில் உள்ளார் என தெரியவில்லை. எல்லோரும் விரும்புவது ஓபிஎஸ்,டிடிவி சின்னம்மா விரும்புவது ஓரணியில் நின்று ஒரு தாய் மக்களாக ஒரு வழியில் சென்று அதிமுகவை மீட்டெடுத்து கண்டிப்பாக வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் மக்கள் விரோத இந்த ஆட்சியை அகற்ற வேண்டும்.
திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டுள்ள திமுக அரசு சட்ட ஒழுங்கு பாதுகாப்பு சீரழிந்துள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை 2026 இல் இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் எடப்பாடியார்,ஓபிஎஸ, டிடிவி,சின்னம்மா ஆகிய நான்கு பேரும் ஓரணியில் நின்று ஒரு வழியில் சென்று ஒரு தாய் மக்களாக தேர்தலில் பயணித்தால் வெற்றி நிச்சயம் என தெரிவித்தார்