News தமிழ்நாடு

விஜய் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

  • June 23, 2025
  • 0

சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முருகன் பக்தர்கள் மாநாட்டில் அண்ணாவை விமர்சனம் செய்யும் வகையில் வீடியோவை ஒளிபரப்பியது வருத்தமளிக்கிறது. மறைந்த முன்னாள் தலைவர்களை விமர்சிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டதை தவிர்த்திருக்கலாம்,

விஜய் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,

முருகன் பக்தர்கள் மாநாட்டில் அண்ணாவை விமர்சனம் செய்யும் வகையில் வீடியோவை ஒளிபரப்பியது வருத்தமளிக்கிறது.

மறைந்த முன்னாள் தலைவர்களை விமர்சிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டதை தவிர்த்திருக்கலாம், அறிஞர் அண்ணாவின் பேச்சு, செயல், எழுத்துக்கள் சிலரின் மனதை புண்படுத்தி இருக்கலாம், அதனுடைய வெளிப்பாடாக வீடியோ வெளியிட்டு இருக்கலாம்,

ஒரு நிகழ்ச்சியில் நடக்கின்ற நல்ல நிகழ்வுகளைப் பற்றி பேசுவோம் அதில் நடந்த ஒரு நிகழ்வைப் பற்றி பேசி அதனுடைய ஒட்டுமொத்த மாநாட்டின் நல்ல கருத்துக்களை புறக்கணிக்க முடியாது.

இன்றைய அரசியல் சூழலில் மறைந்த தலைவர்களின் நல்ல நிகழ்வுகளை பற்றி பேசுவதுதான் சாலச் சிறந்தது, முன்னாள் தலைவர்களின் ஒரு போக்கு சிந்தனைகளையும் அந்த நேரத்தில் எடுத்த முடிவுகளைப் பற்றி தற்போது விமர்சனம் செய்வது தேவையற்ற விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு முருக பக்தர்கள் மாநாடு பயத்தையும் பீதியையும் கொடுத்துள்ளது. மதுரையில் நடைபெற்ற முருக பக்தர் மாநாடு ஆன்மீகத்தின் அடையாளமாக நடந்த எழுச்சி மாநாடு.

பழனியில் நடைபெற்ற மாநாடு பக்தியே இல்லாத மாநாடு
பழனியில் நடைபெற்றது நிர்பந்த மாநாடு, மதுரையில் நடைபெற்றது தான் பக்தர்களுடைய மாநாடு.

திமுக கட்சியோடு திருமாவளவன் மனதளவில் உறவை முறித்துக் கொண்டார், பெயரளவில் மட்டுமே உறவை வைத்துள்ளார். திருமாவளவன் அதிமுக கூட்டணிக்கு வந்தால் அதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுப்பார்.

திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் திமுக அதிருப்தியில் உள்ளதன் காரணமாகவே திமுகவிடம் கூடுதல் சீட் கேட்டு வருகிறது.

திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது, கூட்டணியில் பிரச்சனை உருவாகி கூட்டணி முறிய அதிக வாய்ப்புள்ளது. திமுக ஆட்சியை எதிர்க்கும் கட்சிகள் அதிமுக தலைமையில் இணையும் காலம் விரைவில் வரும்.

எடப்பாடி பழனிச்சாமியை தொட்டுப் பார்க்கவோ, அவரது வாழ்வியல் முறையிலோ, கருத்தியல் முறையிலோ தாக்குதல் நடத்தினால் அதிமுகவின் எதிர் தாக்குதல் கடுமையாக இருக்கும்.

எங்கள் வாயில் இருந்து வரக்கூடிய வார்த்தைகள் வெடிகுண்டாக வரும், திமுக ஐடி விங் தனது மூர்க்கத்தனமான செயல்பாடுகளை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

எடப்பாடி பழனிச்சாமி அசிங்கப்படுத்த நினைத்தவர்கள் இன்று ஓரமாக ஒதுங்கி இருக்கிறார்கள், திமுக அப்படி நினைத்தால் அவர்களும் ஓரமாக ஒதுங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

திமுகவின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற எண்ணுகின்ற தலைவர்களில் ஒருவராக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இருக்கிறார்.

விஜய் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும். அதிமுக தலைமை தான் திமுகவிற்கு வலுவான எதிர்ப்பை கொடுக்கும் தலைமை.

திமுகவை வெல்ல வேண்டும் என்றால் அதிமுகவால் மட்டுமே முடியும் என்பதால் விஜய் பக்க பலமாக, உரமாக அதிமுகவோடும், எடப்பாடியாடி பழனிச்சாமியோடு கைகோர்ப்பதுததான் சாலச் சிறந்த முடிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *