அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு எதிராக 50 சதவீதம் இறக்குமதி விதித்ததை கண்டித்து இதுவரை பிரதமர் வாய் திறக்காமல் இருப்பதாகவும், இதனால் பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு ஆதரவாக செயல்படுகிறார் என குற்றம் சாட்டி, திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மோடி உருவப்படத்தை எரிக்க முயல்வதாகதகவல் அறிந்த பாஜகவினர் தாலுகா அலுவலகம் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.இந்த நிலையில் ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பினர் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷமிட்டு மோடி மற்றும் டிரம்ப் உருவப்படத்தை தீயிட்டு கொளுத்த முயன்றனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.
சம்பவத்தை கண்ட போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர் தொடர்ந்து மோடி உருவப்படத்தை எரிக்க முயன்ற சம்பவத்தை போலீசார் தடுத்து நிறுத்தி படங்களை பறிமுதல் செய்தனர் அதிலும் ஒரு சிலர் மோடி படத்தை செருப்பால் அடித்தும் தீயிட்டும் கொளுத்தினர்.
மேலும் தங்கள் போராட்டத்திற்கு இடையூறாக மோதல் போக்கில் ஈடுபட்ட பாஜகவினரின் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி தெரிகின்றன மதுரை விருதுநகர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் சமாதானம் செய்து போராட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு நரை கைது செய்து தனியார் தின்றும் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் தாலுகா அலுவலகம் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது. போலீசார் முன்னிலையில் இரு கட்சியின தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது