15/05/2026
News அரசியல் தமிழ்நாடு

தமிழ்நாடு பெரியார் புராணம் அல்ல, பெரிய புராணம் தான்.. – தமிழிசை சௌந்தரராஜன்

  • July 26, 2025
  • 0

இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் சுகாதாரத்துறை., அப்படி என்றால் தமிழக முதல்வர் அரசு ஏன் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கவில்லை. முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி.! தூத்துக்குடி விமான நிலையத்தில் 452 கோடி மதிப்பில் விரிவாக்க

தமிழ்நாடு பெரியார் புராணம் அல்ல, பெரிய புராணம் தான்.. – தமிழிசை சௌந்தரராஜன்

இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் சுகாதாரத்துறை., அப்படி என்றால் தமிழக முதல்வர் அரசு ஏன் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கவில்லை.

முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி.!

தூத்துக்குடி விமான நிலையத்தில் 452 கோடி மதிப்பில் விரிவாக்க பணிகள் நடைபெற்று விரிவாக்கப்பட்ட கட்டடத்தை மோடி வரும் இன்று இரவு 8:30-க்கு திறக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார்.

தூத்துக்குடி விமான நிலைய வாயிலில் முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், வாழ்நாளில் மிகப்பெரிய சாதனையான தினம் இன்று, தூத்துக்குடியில் இருந்து இரவில் விமான நிலையத்திற்கு செல்ல முடியவில்லை என்று வருத்தப்பட்டேன். ஆனால் இன்று முதல் நிறைவேறவுள்ளது. மேலும் பாரத பிரதமர் இரவு விமான நிலையத்தில் 4800 கோடி ரூபாய் நலத்திட்டங்களை உள்ளார். இதனை வ உ சி, பாரதியார் போன்றவர்கள் விண்ணில் இருந்து வாழ்த்தி கொண்டு இருப்பார்கள்.

ஆனால், திமுக-வினர் வீடு, வீடாக பாஜக நிதி கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள். திமுக நான்கு வருடத்திற்கு முன்னர் செய்ய முடியாததை 45 நாட்களில் ஓரினில் தமிழ்நாடு என்று எப்படி செய்ய முடியும்? ஏற்கனவே பெட்டிக்குள் பல மனுக்கள் தூங்கிக்கொண்டு இருக்கும்போது எந்த பெட்டிக்குள் இந்த மனு தூங்கப் போவது என்று தெரியாது. ஆகவே அன்றன்றைக்கு மக்கள் திட்டங்களை தீர்வு கண்டு இருந்தால் இன்று மக்களோடு ஸ்டாலின் என்று போய் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே, தமிழக அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருகிறது.

அதனால் மத்திய அரசு மீது பழி சுமந்துகிறது. மக்களை அப்பட்டமாக ஏமாற்றுவதால் உங்களுடன் ஸ்டாலின், ஓரடிணியில் தமிழ்நாடு போன்ற வைகளை வைத்து வீடு வீடாக திமுகவினர் செல்கின்றனர். இதனை 45 நாட்கள் செய்ய முடியாது. ஆகவே, 2026 நீங்கள் காண்பீர்கள். 12 கோடி ரூபாய் கங்கை கொண்ட சோழபுரதிற்கு மோடி கொடுத்திருக்கிறார். பிரதமர் அங்கு வருவதால் மக்கள் கவனம் பெற்று இருக்கிறார்கள்.ஆகவே, தமிழ்நாடு பெரியார் புராணம் அல்ல, பெரிய புராணம்.

பாஜக தமிழுக்கு எதிரானவர்கள் என்று சொன்னால் மக்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். தமிழகத்தில் பெரிய புராணம், ஆன்மீகத் தமிழ், காவி தமிழ் தான். காவல்துறை அதிகாரிக்கு பாதுகாப்பு இல்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, காவல்துறை அதிகாரி நேர்மையாக இருப்பதால் குறிவைக்கப்படுகிறார்கள்.

சுகாதாரத்துறை இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது என்றால் ஏன் தமிழக முதல்வர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கவில்லை. மக்கள் வேறு முதலமைச்சர் வேறா? உங்களுடன் ஸ்டாலின் தானே மக்களுடன் போய் இருக்க வேண்டியதுதானே, தமிழக மருத்துவமனை தரம் வாய்ந்தது என்று கூறுகிறீர்கள்.. அப்போது என் அங்கு செல்லவில்லை. பொதுமக்களுக்கு ஒரு சிகிச்சை? மக்களுக்கு ஒரு சிகிச்சையா? ஒரு மருத்துவராக முதலமைச்சர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வேண்டும் என்றார்.