01/06/2026
News தமிழ்நாடு

போலீஸ் பாதுகாப்பு கவினின் குடும்பத்திற்கு – மாநில எஸ்சி எஸ்டி ஆணைய தலைவர் தமிழ்வாணன்

  • August 1, 2025
  • 0

தூத்துக்குடி பொறியாளர் கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இனிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், என அவரது பெற்றோர்கள் விரும்புகின்றனர். மேலும் சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறும் அரசு சார்பில் 12 லட்ச ரூபாய் இழப்பீடு மற்றும் அனைத்து

போலீஸ் பாதுகாப்பு கவினின் குடும்பத்திற்கு – மாநில எஸ்சி எஸ்டி ஆணைய தலைவர் தமிழ்வாணன்

தூத்துக்குடி பொறியாளர் கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இனிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், என அவரது பெற்றோர்கள் விரும்புகின்றனர். மேலும் சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறும் அரசு சார்பில் 12 லட்ச ரூபாய் இழப்பீடு மற்றும் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும். போலீஸ் பாதுகாப்பு கவினின் குடும்பத்திற்கு அளிக்கப்படும் என மாநில எஸ்சி எஸ்டி ஆணைய தலைவர் தமிழ்வாணன் பேட்டி;

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் நவீன் கடந்த 27 ஆம் தேதி நெல்லையில் வைத்து ஆணவ படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளி சுர்ஜித் மற்றும் அவரது தந்தை காவல் உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து நான்கு நாட்கள் போராட்டத்திற்கு பின் கவின் உறவினர்கள் கவின் உடலை பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆறுமுகமங்கலம் கிராமத்திற்கு மாநில எஸ்சி எஸ்டி ஆணைய தலைவர் தமிழ்வாணன் மற்றும் ஆணைய உறுப்பினர்கள் அடங்கிய குழு நேரில் வந்து கவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும் ஆர் எஸ் சார்பில் முதற்கட்டமாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும். நிதிக்கான ஆறு லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினர். பின்னர் அவரது பெற்றோரிடம் சம்பவத்திற்கு தங்களது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்சி எஸ்டி ஆணைய தலைவர் தமிழ்வாணன் கூறுகையில் நல்ல பையன் அவர்களுக்கு என்ன ஆறுதல் சொல்ல முடியும் கண்களில் கண்ணீர் வருகிறது. சட்டப்படி எல்லாம் நடக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் அரசாங்கம் 12 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். அதில் முதல் தவணையாக 6 லட்ச ரூபாய் வழங்கி உள்ளோம். அதற்கான காசலையை அவர்களிடம் வழங்கி உள்ளோம் அவர்கள் பெரிதாக கோரிக்கை எதுவும் வைக்கவில்லை. நேர்மையாக எல்லாம் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றனர் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

அவர்களுக்கு அரசாங்கத்தில் வழங்கப்படும் சலுகைகள் என்னென்னவோ அதையெல்லாம் வாங்கி தருவோம் எனக் கூறியுள்ளோம் அரசியல் ஆக்க வேண்டாம் இவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக முடியும் சட்ட பூர்வமான ஆலோசனைகளை வழங்கி உள்ளோம் சட்டப்படி தான் எல்லாம் நடக்கும் என்று விரும்புகிறோம். அதன்படி நடக்கும் காவல்துறையினர் வருவாய்த் துறையினர் நல்ல ஒத்துழைப்பு தருகின்றனர் போலீஸ் அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள்.