News அரசியல் தமிழ்நாடு

ஓபிஎஸ் ஏன் இந்த முடிவை எடுத்தார் என தெரியவில்லை – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

  • August 1, 2025
  • 0

ஓபிஎஸ் ஏன் இந்த முடிவை எடுத்தார் என தெரியவில்லை, தனிப்பட்ட காரணங்களால் இந்த முடிவை எடுத்திருக்கலாம்.பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என பன்னீர்செல்வம் கேட்கவில்லை, கேட்டிருந்தால் நான் ஏற்பாடு செய்து கொடுத்து இருப்பேன். பிரதமரை சந்திக்க வேண்டும் என

ஓபிஎஸ் ஏன் இந்த முடிவை எடுத்தார் என தெரியவில்லை – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

ஓபிஎஸ் ஏன் இந்த முடிவை எடுத்தார் என தெரியவில்லை, தனிப்பட்ட காரணங்களால் இந்த முடிவை எடுத்திருக்கலாம்.பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என பன்னீர்செல்வம் கேட்கவில்லை, கேட்டிருந்தால் நான் ஏற்பாடு செய்து கொடுத்து இருப்பேன்.

பிரதமரை சந்திக்க வேண்டும் என பன்னீர்செல்வம் கேட்டால் ஏற்பாடு செய்து தருவேன்- மதுரையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி;

மதுரை சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாஜகவின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்று நிறைவடைந்த நிலையில் நயினார் நாகேந்திரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவர் கூறும்போது,

ஏற்கனவே போன் மூலமாக ஓபிஎஸ்-யிடம் பேசிக் கொண்டுதான் இருந்தேன்.. அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு ஓபிஎஸ் இடமும் தினகரனிடனும் போனில் ஏற்கனவே பேசி இருந்தேன்.

சட்டமன்றத்தில் சந்திக்கும் போது மற்றும் போனிலும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன் அவருக்கு வேறு எதுவும் பிரச்சனையா என்பது தெரியவில்லை.
அதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்.

மோடியை சந்திக்க அனுமதி தரவில்லை என்பதால் தான் வெளியேறியதாக கூறப்படுகிறது குறித்த கேள்விக்கு, என்னிடம் சொல்லியிருந்தால் நான் வாங்கி தந்திருப்பேன்..

இபிஎஸ் அழுத்தத்தால் தான் ஓபிஎஸ் வெளியேறினாரா? என்று கேள்விக்கு; அப்படி ஒன்றும் இல்லை

ஓபிஎஸ் அப்படி ஒரு முடிவு எடுத்திருப்பது அதுக்கு நான் கருத்து சொல்லவில்லை.

உங்களுக்கு பலவீனமா இல்லையா என்ற கேள்விக்கு; அது தேர்தலில் தான் தெரிய வரும்..

மோடி மீண்டும் தமிழக வரும்போது ஓபிஎஸ்சி சந்திக்க வைக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு;

ஓபிஎஸ் தரப்பில் இருந்து கேட்டால் கண்டிப்பாக சந்திக்க வைப்போம். முதல்வரை நான் கூட சந்திக்கலாம் என்னுடைய சொந்த பிரச்சனைக்காக என்றார்.