அரியலூர் மாவட்டம் செந்துறையில் சென்னைக்கு மூன்று புதிய பேருந்து சேவைகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார் அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகளை வாங்க தமிழ்நாடு முதலமைச்சர் நிதி ஒதுக்கியதன் அடிப்படையில் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு பழைய பேருந்துகளுக்கு பதிலாக இயக்கப்படுகிறது.
அந்த வகையில் இன்று செந்துரையில் இருந்து சென்னைக்கு மூன்று புதிய பேருந்துகள் மற்றும் ஜெயங்கொண்டத்திலிருந்து திருப்பூர் மதுரை சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நான்கு புதிய பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளது தமிழகம் முழுவதும் பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகள் வாங்கி இயக்குவதன் அடிப்படையில் சுமார் 5000 பேருந்துகள் இயக்கப்படுகிறது தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து வரும் பேருந்துகள் இந்த ஆண்டு இறுதிக்குள் பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு புதிய பேருந்துகள் செயல்பாட்டிற்கு வரும்.
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த நான்கு ஆண்டு சாதனைகளை எடுத்துக் கூறியுள்ளார் ஒன்றிய அரசு வெளியிட்ட மாநில அரசின் வளர்ச்சி பட்டியலில் 11.19 சதவீதம் அளவிற்கு தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது இந்த வளர்ச்சி விகிதத்தை தமிழ்நாடு அரசு தானே சொல்லிக் கொள்வதில்லை இந்தியாவில் மற்ற மாநிலங்களின் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் நிலையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி இரட்டிப்பு வளர்ச்சி பெற்று உள்ளது.
இந்த இரட்டை இலக்க வளர்ச்சி மறைந்த முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் வெளிப்பட்டது மீண்டும் தற்போது தான் இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்றுள்ளோம் பாஜகவினர் அரசியல் மேடையில் பேசுவதற்கும் அவர்களின் ஆட்சியில் வெளியிடப்படும் அறிக்கைகளுக்கும் எவ்வளவு வித்தியாசம் என்பது இதன் மூலம் தெளிவாக எடுத்துக்காட்டப்படுகிறது. மத்திய அரசின் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தமிழ்நாடு வளர்ச்சி பெற்று உள்ளது. பல்வேறு நாடுகள் நமது மாநிலத்தில் தொழில்கள் தொடங்கி வருகிறது ஒரு ட்ரில்லியன் டாலர் என்ற முதல்வரின் கனவு நிச்சயம் நிறைவேறும் எனக் கூறினார்.
மேலும் குஜராத் மாடல் திராவிட மாடல் குறித்த கேள்விக்கு மத்திய அரசு தற்போது வெளியிட்ட மாநிலங்களின் வளர்ச்சி பட்டியலில் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் குஜராத் உள்ளது குஜராத் மாடல் என்பது சமூக வலைதளங்கள் வாயிலாக பொய்யாக உருவாக்கப்பட்ட மீம்சை வைத்து தான் கொண்டாடப்பட்டது உண்மை நிலவரம் தற்போது வெளிப்பட்டுள்ளது திராவிட மாடலை பார்த்து தான் அவர்கள் பின்பற்றும் நிலை தான் இன்றைக்கு இருக்கிறது என கூறினார்