News தமிழ்நாடு

வெள்ள அபாய எச்சரிக்கை… யாருக்கு..?

  • June 28, 2025
  • 0

மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை விரைவில் எட்டும் நிலையில் உள்ளதால் அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் முதல் 75,000 கன அடி நீர் வெளியேற்ற வாய்ப்பு உள்ள நிலையில் தற்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம்

வெள்ள அபாய எச்சரிக்கை… யாருக்கு..?

மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை விரைவில் எட்டும் நிலையில் உள்ளதால் அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் முதல் 75,000 கன அடி நீர் வெளியேற்ற வாய்ப்பு உள்ள நிலையில் தற்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் காவிரி ஆற்றின் கரை ஓரம் வசிக்கும் பொது மக்களுக்கு நகராட்சிக்கு உட்பட்ட ஜனதா நகர் பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறை சார்பில் காவிரி கரையோர பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

எக்காரணத்தை கொண்டு பொதுமக்கள் துணி துவைக்கவும் குளிக்கவோ மீன் பிடிக்கவோ காவிரி ஆற்றுக்கு செல்லக்கூடாது என பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒலிபெருக்கி மூலம் தண்டோரா போடப்பட்டு நகராட்சி சார்பில் அறிவிப்புகள் செய்து வருகின்றனர்.

குறிப்பாக மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகுவது குமராபாளையம்,பள்ளிபாளையம் காவிரி கரையோரம் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது இப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு அரசு சார்பில் இதுவரை சிலருக்கு மட்டும் வேறு இடத்தில் இடம் வழங்கப்பட்டு வந்தாலும் இன்னும் சில நபர்களுக்கு இடம் வழங்கப்படாததால் அவர்கள் தொடர்ந்து காவிரி கரையோரமே வசித்து வரும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.