News அரசியல் தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மும்மடங்காக உயர்வு : கர்நாடகாவின் அடுத்த முடிவு

  • July 16, 2024
  • 0

கர்நாடகாவின் கபினி அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணை நீர்வரத்து மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகா தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது. இதற்கு தமிழக அரசு அனைத்துக் கட்சி

கர்நாடகாவின் கபினி அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணை நீர்வரத்து மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகா தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது. இதற்கு தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. உரிய தண்ணீரை திறக்க மறுக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடி சட்டப்போராட்டம் நடத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.டு பிடித்து வருகிறது. இதனால் கடந்த ஆண்டு முழுவதும் தமிழ்நாட்டிற்கு பாதியளவு தண்ணீரே வந்தது. இந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது என்பதுதான் கர்நாடகாவின் நிலைப்பாடாக இருந்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam

அண்மையில் நடந்த காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் ஜூலை 12 – 31 வரை தமிழகத்திற்கு நாள்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், கர்நாடக அரசோ, தமிழகத்திற்கு தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறக்க முடியாது என கைவிரித்தது. அதற்கு பதிலாக 8500 கன அடி தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவித்தது.

அதே சமயம் தற்போது கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கேஆர்எஸ், கபினி அணைகள் நிரம்பி வழிகின்றன. இன்று மாலை நிலவரப்படி கபினி அணைக்கு நீர்வரத்து 29,310 கன அடியாக உள்ளது. அதன் மொத்த கொள்ளளவு 19.52 டிஎம்சி என்ற சூழலில், தற்போது 18.47 டிஎம்சி நீர் உள்ளது.

கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மேட்டூரை வந்தடைந்த நிலையில், மேட்டூர் அணைக்கான நீர் வரத்து மும்மடங்காக அதிகரித்துள்ளது. இன்று காலை, விநாடிக்கு 5,054 கன அடியாக இருந்த நீர் வரத்து, தற்போது 16,577 கன அடியாக அதிகரித்தது. காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழையால் நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.