இவ்ளோ குறைவா? இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை
- April 23, 2024
- 0
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.145 குறைந்து ரூ.6,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 8 கிராம் கொண்ட ஒரு சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600-க்கு விற்கப்படுகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.145 குறைந்து ரூ.6,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 8 கிராம் கொண்ட ஒரு சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600-க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உலகப் பொருளாதாரம், போர், இறக்குமதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்து எதிர்பாராத அளவிற்கு தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. இதனால் தங்கம் வாங்குபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று திடீரென குறைந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.145 குறைந்து ரூ.6,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 8 கிராம் கொண்ட ஒரு சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600-க்கு விற்கப்படுகிறது.
இதேபோல பார் வெள்ளியின் விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2.50 குறைந்து ரூ.86.50-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,500 குறைந்து ரூ.86,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த திடீர் விலை குறைவு, தங்கம் வாங்குபவர்களுக்கு ஆனந்தமாக இருந்தாலும், ஏற்கனவே கிடுகிடுவென விலை உயர்ந்த அதிர்ச்சியில் இருந்து அவர்கள் மீண்டு வந்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மை. காரணம், கடந்தாண்டு இதே நாளான ஏப்ரல் 23-ம் தேதியுடன் ஒப்பிடுகையில், தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.8,760 உயர்ந்துள்ளது. ரூ.44,840-க்கு விற்ற ஒரு சவரன் தங்கம், தற்போது ரூ.53,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தாண்டு ஜனவரி 1-ம் தேதி ரூ.47,280 ஆக இருந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை 3 மாதங்களில் ரூ.6,320 அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் தங்கம் விலை குறைந்தாலும் அடுத்து வரும் நாட்களில் விலை எவ்வளவு உயரும் என்ற அச்சம் தங்கம் வாங்குபவர்களின் மனதில் இருக்கத்தான் செய்கிறது.