15/07/2026
இந்தியா தமிழ்நாடு

தமிழகத்தில் ரயில் திட்டங்களுக்கு இத்தனை கோடியா..! – மத்திய இணை அமைச்சர் விளக்கம்

  • July 11, 2026
  • 0

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ரயில் நிலையம் மேம்படுத்தும் பணி அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளில் குறித்து மத்திய இணை அமைச்சர் எல் முருகன்

தமிழகத்தில் ரயில் திட்டங்களுக்கு இத்தனை கோடியா..! – மத்திய இணை அமைச்சர் விளக்கம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ரயில் நிலையம் மேம்படுத்தும் பணி அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளில் குறித்து மத்திய இணை அமைச்சர் எல் முருகன் அவர்கள் இன்று ரயில் நிலையத்தில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டார்.

நூறாண்டு பழமை வாய்ந்த மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை பழமை மாறாமல் புது பொலிவுடன் புனரமைப்பு பணி மற்றும் புதிய பிளாட்பாரம், கூடுதல் ரயில்கள் நிறுத்த வசதி போன்ற பல கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில் அந்த பணிகளை ஆய்வு செய்து அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தமிழகத்தில் கடந்த திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் ரயில்வே வளர்ச்சிப் பணிக்காக ஆண்டுக்கு 800 கோடி ரூபாய் மட்டுமே வழங்கி வந்தது.

ஆனால் தற்போதைய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மட்டும் ஆண்டுக்கு 6 ஆயிரம் முதல் 8000 ரூபாய் வரை செலவழித்து ரயில்வே கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது.

பிரதமர் மோடி அவர்களின் கனவான 2047 வளர்ச்சி அடைந்த பாரதம் என்பதை இலக்காகக் கொண்டு மாநிலத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தி வேலை வாய்ப்பு பொருளாதாரம் போன்றவற்றை மேம்படுத்த மிக கடமையாக செயல்பட்டு வருவதாக கூறினார்.

மேலும் தமிழகத்தில் ஒன்பது புதிய ரயில் தட சேவைகளை தொடங்க மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பணிகளும் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இதுவரை வெளிநாடுகளில் மட்டுமே நாம் பார்த்து வந்த புல்லட் ரயில் சேவை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது சென்னை பெங்களூரு, பெங்களூரு ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இந்த சேவை தொடங்க உள்ளதாகவும் இதற்காக பிரதமர் மோடி மற்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *