01/06/2026
News அரசியல் தமிழ்நாடு

விஜய் கொடுத்த அசத்தல் வாக்குறுதி: காவலர்களுக்கு கொண்டாட்டம்

  • April 14, 2026
  • 0

காவலர்களுக்கு வாரம் ஒருமுறை விடுமுறை வழங்குவதாக விஜய் கூறியுள்ளார். இன்னும் பல அசத்தலான அறிவிப்புகள் உள்ளன.

விஜய் கொடுத்த அசத்தல் வாக்குறுதி: காவலர்களுக்கு கொண்டாட்டம்

இன்று (14.04.2026) திருப்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று பேசினார்.

அப்போது காவல்துறையினருக்காக அசத்தலான திட்டங்களை அறிவித்தார். அவர் அறிவித்த திட்டங்கள் பின்வருமாறு,

  1. காவலர்களுக்கான இடமாற்றம் வெளிப்படையாக நடைமுறைப்படும்
  2. காவலர்களின் மாத ஊதியம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும்
  3. காவலர்களுக்கு மாதம் ரூ.1000 கூடுதலாக வழங்கப்படும்.
  4. காவலர்களின் பணி நேரங்கள் ஒழுங்குபடுத்தப்படும்.
  5. காவலர்களுக்கான சலவைப்படி 1000 ரூபாயாக உயர்த்தப்படும்.
  6. காவலர் நல மருத்துவமனை நிறுவப்படும்
  7. பெண் காவலர்களுக்கென தனி ஓய்வறைகள், நடமாடும் டாய்லெட் யூனிட்டுகள் அமைக்கப்படும்.
  8. அதிக பணிச்சுமை கொண்ட காவலர்களுக்கு வாரத்தில் ஒருநாள் சுழற்சி முறையில் விடுமுறை அளிக்கப்படும்.
  9. பெண் காவலர்கள் பாதுகாப்பு பணிகளுக்கு பணியமர்த்தப்பட மாட்டார்கள்.

தேர்தல் பரபரப்பாக இருக்கும் இந்தச் சூழலில் விஜய் சொன்ன அறிவிப்புகள் காவலர்கள் மத்தியில் மக்கள் மத்தியில் எடுபடுமா என்பதை மே 4 ஆம் தேதி வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.