15/10/2026
News அரசியல் இந்தியா தமிழ்நாடு

அகில இந்திய RSS தலைவர் தமிழகத்திற்கு வருகை..!

  • July 18, 2025
  • 0

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவிற்கு அகில இந்திய RSS தலைவர் மோகன் பகவத் வருகை. 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆர்எஸ்எஸ் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் நான்கு நாட்கள் பயணமாக இன்று மாலை

அகில இந்திய RSS தலைவர் தமிழகத்திற்கு வருகை..!

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவிற்கு அகில இந்திய RSS தலைவர் மோகன் பகவத் வருகை. 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்எஸ்எஸ் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் நான்கு நாட்கள் பயணமாக இன்று மாலை கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவிற்கு வருகை.

18,19,20,21 ஆகிய நான்கு நாட்கள் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் தங்கியிருக்கும் அவர் ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உடன் தனித்தனியே ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நாளை காலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு, விவேகானந்தர் நினைவு மண்டபத்திலும் தரிசனம் செய்ய உள்ளார். தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

குமரி எஸ் பி ஸ்டாலின் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.