01/06/2026
News தமிழ்நாடு

மின்சார உற்பத்தி… ”க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான்” வெளியிட்டுள்ள அறிக்கை

  • July 14, 2025
  • 0

தமிழ்நாட்டில் உள்ள 57 பெரிய நீர்த்தேக்கங்களில் மிதக்கும் சூரிய ஆற்றல் கட்டமைப்பை (Floating Solar Photovoltaics (FPV)) நிறுவுவதன் மூலம் 3.5 கிகாவாட்(GW) மின்சாரம் உற்பத்தி செய்ய முடியுமென ‘க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான்’ வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. FPV

மின்சார உற்பத்தி… ”க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான்” வெளியிட்டுள்ள அறிக்கை

தமிழ்நாட்டில் உள்ள 57 பெரிய நீர்த்தேக்கங்களில் மிதக்கும் சூரிய ஆற்றல் கட்டமைப்பை (Floating Solar Photovoltaics (FPV)) நிறுவுவதன் மூலம் 3.5 கிகாவாட்(GW) மின்சாரம் உற்பத்தி செய்ய முடியுமென ‘க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான்’ வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

FPV மின்சாரத்திற்கான கட்டணம் குறைவு என்பதால் ஆண்டுக்கு ரூ. 3211 கோடியும் 5 ஆண்டுகளில் ரூ. 16000 கோடியையும் சேமிக்க முடியும். இது 2023-24 நிதியாண்டில் மின்வாரியத்திற்கு ஏற்பட்ட நட்டத்தில் பாதியாகும். அந்நிதியாண்டில் மின் வாரியத்தின் நட்டம் ரூ. 6920 ஆக இருந்து குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசு 2030ஆம் ஆண்டுக்குள் மாநிலம் முழுவதும் மொத்தம் 20000 MW சூரிய சக்தி மற்றும் 10,000 MW மின்கலன் கட்டமைப்பை உருவாக்கும் என 2022ஆம் ஆண்டு அறிவித்திருந்தது. நீர்நிலைகளின் மேற்பரப்பில் சூரிய மின்னாற்றலை உற்பத்தி செய்யும் தகடுகளை அமைப்பதன் மூலம் அரசு தன் பசுமை மின்னாற்றல் உற்பத்தி இலக்கைத் தாண்டி சாதிக்க முடியும்.