10 மாநிலங்களில் புதிதாக 12 தொழில் நகரங்களை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் அந்த பட்டியலில் தமிழ்நாட்டிற்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்தும் நோக்கில் 10 மாநிலங்களில் புதிய தொழில் நகரங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.28 ஆயிரத்து 602 கோடி முதலீட்டில் 12 புதிய தொழில் நகரங்கள் அமையும் எனவும், உத்தர பிரேதசம், பீகார், ஆந்திரா உள்பட 10 மாநிலங்களின் வளா்ச்சி ஊக்கமளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. அதன்படி உத்தரகாண்ட் மாநிலத்தின் குர்பியா, பஞ்சாப்பின் ராஜ்புரா பாட்டிாயலா, மகாராஷ்டிராவின் திகி, கேரளாவில் பாலக்காடு, உத்தர பிரதேசத்தின் ஆக்ரா, பிரயாக்ராஷ், பீகாின் கயா, தெலங்கானாவின் ஜஹீராபாத், ராஜஸ்தானின் ஜோத்பூர் பாலி உள்ளிட்ட இடங்களில் தொழில் நகரங்கள் அமைய உள்ளன.
இதன் மூலம் உலகத் தரத்தில் பசுமை நகரங்களாக இவை உருவாகும் என மத்திய அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார். இதுதொடா்பாக அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், தேசிய தொழில் துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.28 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 12 புதிய தொழில் நகரங்கள் அமைய உள்ளன. இதற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம் நாட்டின் தொழில்துறை நிலப்பரப்பு உயரும்.