அமெரிக்காவில் அதிபா் தோ்தல் நவம்பா் மாதம் நடக்கிறது. இதை முன்னிட்டு சிகாகோவில் ஜனநாயக கட்சி சார்பில் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பேசிய முன்னாள் அதிபா் பராக் ஒபாமா, அமெரிக்கா புதிய அத்தியாத்திற்கு தயாராகி வருவதாக கூறினார்.
அமெரிக்காவில் வருகிற நவம்பா் மாதம் அதிபா் தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தோ்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தற்போதைய அதிபா் ஜோ பைடன் போட்டியிட ஆயத்தமானார். எனினும் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜோ பைடன் அதிபா் போட்டியில் இருந்து அதிரடியாக விலகினார். அவரை தொடா்ந்து இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ், டிரம்பிற்கு எதிராக களம் இறங்கினார்.
தற்போது நமக்கு மற்றொரு வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. மக்களுக்கு முன்னேற்றமான மாற்றத்தை கொடுக்க தனது வாழ்நாள் முழுவதும் பணி செய்து வரும் கமலா ஹாரிஸை நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். அமெரிக்காவின் அடுத்த அதிபா் கமலா ஹாரிஸ். எனது நெருங்கிய தோழியை உங்களின் அமெரிக்க அதிபர் வேட்பாளராக காட்டுவது எனக்கு பெருமை. ஜோ பைடனை வரலாறு நினைவு கொள்ளும். வருகிற அமெரிக்க தோ்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற்று அதிபா் ஆவார். எனவே புதிய அத்தியாயத்திற்கு அமெரிக்கா தயார்” என அவா் நம்பிக்கை தொிவித்தார்.