News தமிழ்நாடு

ஹஜ் பயணம் செல்ல வேண்டுமா? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

  • August 14, 2024
  • 0

2025ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் எவ்வாறு விண்ணப்பிப்பது அதன் வழிமுறைகளை தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஹஜ் 2025–ல் ஹஜ் பயணம்

ஹஜ் பயணம் செல்ல வேண்டுமா? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

2025ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் எவ்வாறு விண்ணப்பிப்பது அதன் வழிமுறைகளை தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஹஜ் 2025–ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து, மும்பையிலுள்ள இந்திய ஹஜ் குழுவானது ஹஜ் விண்ணப்பங்களைப் பெற தொடங்கியுள்ளது என்பதை தமிழ் நாடு மாநில ஹஜ் குழு அறிவிக்க விரும்புகிறது.

இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் 2025–ற்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 13.8.2024 முதல் 9.9.2024 முடிய ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் அதாவது www.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக “HAJ SUVIDHA” செயலியினை பதிவிறக்கம் செய்வதன் மூலம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

ஹஜ் 2025–ல் விண்ணப்பதாரர்கள் ஹஜ் விண்ணப்பப் படிவத்தை கட்டணம் ஏதுமின்றி சமர்ப்பிக்கலாம். இயந்திரம் மூலம் படிக்கத் தக்க பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளைநிற பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், உறைத் தலைவரின் இரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரிச் சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவேண்டும். ஹஜ் 2025–ற்கான வழிமுறைகளை இந்திய ஹஜ் குழுவின் இணையதள முகவரி www.hajcommittee.gov.in மூலம் தெரிந்து கொள்ளலாம்

ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 9.9.2024 ஆகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.