ஒலிம்பிக் தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்திற்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், அனைத்து வகையிலும் வினேஷ் போகத் தான் உண்மையான சாம்பியன். நீங்கள் மிகவும் வலிமையாக, எதிர்ப்பாற்றல் உடன், அமைதியாக இறுதி போட்டிக்கு முன்னேறிய விதம் லட்சக்கணக்கான இந்திய மகள்களுக்கு ஒரு முன்னுதாரணம். சில கிராம் எடை காரணமாக நீங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது உங்களின் சாதனைகளை ஒருபோதும் மறைத்துவிடாது.
நீங்கள் ஒரு பதக்கத்தை தவறவிட்டிருக்கலாம். ஆனால் நம்ப முடியாத அர்ப்பணிப்பால் எங்கள் ஒவ்வொருவரின் இதயத்தையும் வென்று விட்டீர்கள் என்று மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் அனைத்து வகையிலும் உண்மையான சாம்பியன் நீங்கள் தான் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு பெரிதும் கவனம் பெற்று வருகிறது.