US Elections: ஜோ பைடனை விட கமலா ஹாரிஸைத் தோற்கடிப்பது எளிது – டொனால்ட் ட்ரம்ப்
July 22, 2024
0
அமெரிக்க அதிபர் தேர்தலிருந்து அதிபர் ஜோ பைடன் விலகிய நிலையில், அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தேர்தலை எதிர்கொள்வார் எனத் தகவல் வெளியானது. ஜோ பைடன் ஆதரவை கமலா ஹாரிஸுக்கு வழங்கும் முடிவும்,
அமெரிக்க அதிபர் தேர்தலிருந்து அதிபர் ஜோ பைடன் விலகிய நிலையில், அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தேர்தலை எதிர்கொள்வார் எனத் தகவல் வெளியானது.
ஜோ பைடன் ஆதரவை கமலா ஹாரிஸுக்கு வழங்கும் முடிவும், அதைத் தொடர்ந்து கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற தகவலுக்கும் மத்தியில், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், “இந்த தேர்தலில் ஜோ பைடனை தோற்கடிப்பதைவிட கமலா ஹாரிஸைத் தோற்கடிப்பது மிகவும் இலகுவானது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து தன் எக்ஸ் பக்கத்தில், `ஜோ பைடன் நமது நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத மிக மோசமான அதிபராக இருந்து, பதவி இழக்கிறார். அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர். தற்போதுவரை பொய்கள், போலிச் செய்திகளால் மட்டுமே தன் பதவியைத் தக்கவைத்துக் கொண்டவர்.
ஜோ பைடனின் மருத்துவர், ஊடகங்கள் உட்பட அவரைச் சுற்றியுள்ள அனைவரும் அவர் அதிபராக மீண்டும் தொடர முடியாது என்பதை அறிந்திருந்தார்கள். அவரது அதிபர் பதவியால் அமெரிக்கா பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அவரால் ஏற்பட்டிருக்கும் சேதத்தை மிக விரைவாகச் சரிசெய்வோம். அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக உயர்த்துவோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.