News சினிமா தமிழ்நாடு

மக்களின் அதீத எதிர்பார்ப்பும் – தோல்வி முகத்தை காட்டும் இந்தியன் 2 படமும்

  • July 12, 2024
  • 0

இந்தியன் படத்தில் ஊழலால் பாதிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் ஒருவர் போராளியாக மாறுகிறார். தான் பாதுகாக்க விரும்பும் நாட்டில் ஊழல் எப்படி பரவியிருக்கிறது என்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். தன் சொந்த மகனே ஊழல்வாதி என்பதை தெரிந்து கொண்ட

மக்களின் அதீத எதிர்பார்ப்பும் – தோல்வி முகத்தை காட்டும் இந்தியன் 2 படமும்

இந்தியன் படத்தில் ஊழலால் பாதிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் ஒருவர் போராளியாக மாறுகிறார். தான் பாதுகாக்க விரும்பும் நாட்டில் ஊழல் எப்படி பரவியிருக்கிறது என்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். தன் சொந்த மகனே ஊழல்வாதி என்பதை தெரிந்து கொண்ட பிறகு அவரை கொலை செய்ய முடிவு செய்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகிறார்.

இரண்டாம் பாகத்தில் சித்தார்த் தலைமையிலான யூடியூபர்கள் குழு ஒன்று நாட்டில் நடக்கும் ஊழல்களை பார்த்துவிட்டு இந்தியன் தாத்தாவை திரும்பி அழைக்கும் நோக்கில் சமூக வலைதளத்தில் பிரச்சாரத்தை துவங்குகிறார்கள். அவர்களின் சமூக வலைதள பிரச்சாரம் தைவானில் மார்ஷியல் ஆர்ட்ஸ் குருவாக இருக்கும் இந்தியன் தாத்தா கண்ணில் படுகிறது. ஊழலுக்கு எதிரான தன் போராட்டத்தை தொடர இந்தியாவுக்கு கிளம்பி வருகிறார் சேனாபதி.

உங்கள் குடும்பத்தினராக இருந்தாலும் சரி, ஊழல் செய்தால் அவர்களை எக்ஸ்போஸ் செய்யுமாறு நாட்டில் இருக்கும் இளைஞர்களை வலியுறுத்துகிறார் அவர். இப்படியே கதை நகர்கிறது…

இந்தியன் 2 படத்தின் திரைக்கதை வலுவில்லாதது தான் பிரச்சனை. பிரமாண்டமான செட்டுகள், விஷுவல் எஃபெக்ட்ஸ், ஏகப்பட்ட கலைஞர்கள் நடித்திருந்தாலும் அந்த எமோஷனல் டச் இல்லை. சேனாபதியின் போராட்டம் ஈர்க்கவில்லை. இத்தனை ஆண்டுகளாக ஊழல் விஸ்வரூபம் எடுத்த பிறகு அவர் ஏன் தற்போது போராட வந்திருக்கிறார் என நினைக்க வைக்கிறது.

ஷங்கரின் பிரமாண்டம் படத்திற்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. ஆக்ஷன் காட்சிகள் கூட தியேட்டரில் இருப்பவர்களின் ஆவலை மேலும் தூண்டவில்லை. இந்தியன் படத்தின் அடுத்த பாகம் வருவதால் ஆக்ஷன் காட்சிகளை அதில் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்துவிட்டார் போன்று. அந்த காட்சிகளுக்கு இசை மூலம் உயிர் கொடுக்க முயற்சி செய்து தோல்வி அடைந்திருக்கிறார் அனிருத்.

பான் இந்திய ஐடியாவை கைவிட்டுவிட்டு ஒரு மாநிலத்தை மட்டும் குறி வைத்திருந்தால் இந்தியன் தாத்தாவின் தாக்கம் அதிகமாக இருந்திருக்கும்.