நடிகை சினேகா தன்னுடைய மகனான விஹானுடன் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்புடம் நெட்டிசன்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
சினிமாவில் நடிகர், நடிகைகள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தால் தான் அவர்களுக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வரும், இந்நிலையில் 42 வயதான நடிகை சினேகா இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான பிறகும் யங் லுக்கில் இருக்க காரணம் ஒர்க் அவுட் தான். இதனை பல பேட்டிகளில் அவரே கூறி இருக்கிறார். தற்போது விஜயின் GOAT படத்தில் சினேகா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை சினேகா, தனது மகனுடன் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அம்மாவுக்கு போட்டியாக விஹானும் ஒர்க் அவுட் செய்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் சினேகா உங்கள் மகனை சினிமாவில் அறிமுகப்படுத்த போறீங்க போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.