இந்துத்துவ தலைவரா ஜெயலலிதா? – கொதித்த கே.சி.பழனிசாமி
- May 24, 2024
- 0
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெ.ஜெயலலிதா ஒரு இந்துத்துவ தலைவர் என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெ.ஜெயலலிதா ஒரு இந்துத்துவ தலைவர் என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.
திராவிட இயக்க தலைவர்களுள் ஒருவரான ஜெயலலிதாவை இந்துத்துவ தலைவர் என்று சொல்வதற்கான காரண அடிப்படைகள் ஏதுமில்லை என்று அதிமுகவினர் பலரும் பேசிவரும் நிலையில், அவர் இந்துத்துவ கொள்கைகள் சிலவற்றை அமல்படுத்தினார் என்று அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கே.சி.பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “ஜெயலலிதா அம்மா மிகச்சிறந்த திராவிட தலைவர், சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டம் பெற்றவர். திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவர் மீது இதுபோன்ற ஹிந்துத்துவா சாயல் பூசுவது கடும்கண்டனத்திற்குரியது.
இந்துத்துவா சித்தாந்தங்களில் சிலவற்றை அமல்படுத்தியதில் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அறிந்தவுடன் அந்த உத்தரவுகளை திரும்பப் பெற்றார்.
அதன்பின்தான், பொது மேடையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன் நான் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன். அதற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் இனி மேல் எந்நாளும் பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என்று உங்களிடம் எனது வாக்குறுதியாக கொடுக்கிறேன் என்றார்.
உங்கள் வாக்குவங்கி அரசியலுக்காக தவறான தகவல்களை வெளிவிடாதீர்கள். ஜெயலலிதா அம்மா அவர்கள் திராவிட சித்தாந்தத்தில் வந்தவர். அதை அவர் சட்டமன்றத்திலேயே பதிவு செய்திருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.