பொய் பொய்யப்பன் – தொடர் அறிமுகம்
- May 20, 2024
- 0
மீண்டும் மீண்டும் பொய்ச்செய்திகளை பரப்பும் நபர்களுக்கு பொய் பொய்யப்பன் (Habitual Misinformer) என்ற அடையாளப் பட்டமும் வழங்கப்படும்.
மீண்டும் மீண்டும் பொய்ச்செய்திகளை பரப்பும் நபர்களுக்கு பொய் பொய்யப்பன் (Habitual Misinformer) என்ற அடையாளப் பட்டமும் வழங்கப்படும்.
சமூக ஊடகம் தகவல் பரிமாற்றத்தை எந்த அளவுக்கு எளிதாக்கியதோ, அதே அளவுக்கு உண்மைத் தன்மையையும் சிதைவுக்கு உள்ளாக்கி விட்டது. முதலில் உங்களை அடையும் செய்திகளை நம்பத்தொடங்கியதன் விளைவு, பொய்ச்செய்திகள் பறக்கின்றன. உண்மைகள் மெல்ல மெல்ல நகர்கின்றன. அப்படியான நகரும் உண்மைகளின் வலிமையைக் கொண்டு பறக்கும் பொய்களை நொறுக்கும் முயற்சிதான் இந்த ‘பொய் பொய்யப்பன்’ தொடர்.
பொய்ச்செய்திகளைப் பரப்புவதில் பிரதானமாக இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, உண்மை என்று நம்பி பொய்யைப் பரப்புவது (Misinformation). மற்றொன்று, பொய் என்று தெரிந்தே உள்நோக்கத்துடன் பரப்புவது (Disinformation). இந்த இரண்டையும் மையப்படுத்தியே பொய்ச்செய்திகளின் உட்பிரிவுகள் வகைப்படுத்தப்படுகின்றன.
நமது தளம் பொய்ச்செய்திகளை 3 பிரிவாக வகைப்படுத்துகிறது. அவை,
அதன் உட்பிரிவுகளாக,
பொய்ச்செய்திகளை பொய்ச்செய்திகள் என்று அடையாளம் காட்டவே தனித்திறன்கள் தேவையாக இருக்கும் நிலையில், நம் வாசகர்களுக்காக Penpointnews.in இனி தவறான செய்திகளை அடையாளம் காட்டப்போகிறது. அத்துடன், பொய்ச்செய்திகளைப் பரப்பும் நபர்களையும் (கணக்குகளை) அடையாளம் காட்டப்போகிறது.
அதைத் தொடர்ந்து, மீண்டும் மீண்டும் பொய்ச்செய்திகளை பரப்பும் நபர்களுக்கு பொய் பொய்யப்பன் (Habitual Misinformer) என்ற அடையாளப் பட்டமும் வழங்கப்படும்.
உங்கள் கவனத்துக்கு வரும் செய்திகளில் சந்தேகத்துக்குரியவை அல்லது உண்மைத்தன்மையை சோதிக்க விரும்புகிறவற்றை 8870812507 என்ற எண்ணுக்கு வாட்சப் மூலமாக தகவல் தெரிவிக்கலாம். அனைவரும் இணைந்து பொய்யர்களைத் தோலுரிப்போம். எப்போதும் போல தொடர்ந்து ஆதரவு தருக.
அன்புடன்
PenpointNews குழு