அரசியல் இந்தியா சிறப்பு கட்டுரைகள்

இந்தியாவில் முதல்முறையா? என்னதான் நடக்குது தேர்தல் ஆணையத்தில்?

  • March 10, 2024
  • 0

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை நடத்தப்போகும் அமைப்பின் தலைமைப்பொறுப்பிலிருந்து அரசியல் உள்ளிட்ட காரணங்களுக்காக அதிகாரிகள் விலகுவது தேசத்துக்கு நல்லதல்ல.

இந்தியாவில் முதல்முறையா? என்னதான் நடக்குது தேர்தல் ஆணையத்தில்?

சுதந்திர இந்தியாவில் இதுவரை நடக்காத சம்பவங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது நடைபெற்று வருவதாக பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் தெரிவிக்கிறார். அப்படி என்னதான் நடந்துவிட்டது. மிக எளிமையாக 10 தகவல்களில் இந்த செய்தியில் புரிந்து கொள்வோம்.

  1. மக்களவை தேர்தல் அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால், அவருடைய பதவிக்காலம் 2027ஆம் ஆண்டு வரை உள்ளது. அவசர அவசரமாக நிலையில் அவருடைய ராஜினாமா தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  2. அடுத்த 2 மணி நேரத்தில் இந்த பதவி விலகலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து கோயல் நேற்று முதலே பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என அதிகாரப்பூர்வமாக அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் தேர்தல் ஆணையர் காலி இடங்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.
  3. தேர்தல் ஆணையத்தில் மூவர் இடம் பெறவேண்டிய நிலையில் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்றார். அவர் ஏன் விலகினார் என்பது குறித்து எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகள் , பாஜகவின் அழுத்தம் காரணமாக அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றன.
  4. இந்திய ஜனநாயகம் தோன்றிய காலம் முதல் இதுவரை இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே கிடையாது. தேர்தல் ஆணையம் பல காலங்களில் பாரபட்சமாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தது. அது மத்தியில் எந்த ஆட்சியில் இருந்தாலும் தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன்தான் நடந்து கொண்டது என்று பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
  5. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை நடத்தப்போகும் அமைப்பின் தலைமைப்பொறுப்பிலிருந்து அரசியல் உள்ளிட்ட காரணங்களுக்காக அதிகாரிகள் விலகுவது தேசத்துக்கு நல்லதல்ல.
  6. இந்த பதவிவிலகலை அடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் ஒரே ஒருவரின் தலைமையில் இயங்கும் அமைப்பாக தற்போது மாறியுள்ளது. இது அபாயகரமானது.