உலகம்

போப் பிரான்சிஸ் காலமானார்: அடுத்த போப் யார்?

  • April 21, 2025
  • 0

கத்தோலிக்க திருச்சபையின் 266-வது போப்பாண்டவரான போப் பிரான்சிஸ் (88) காலமானார். அர்ஜென்டினாவில் ஜோர்ஜ் மாரியோ பெர்கோக்லியோ என்ற இயற்பெயருடன் பிறந்த அவர், 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது மறைவுக்கு உலகெங்கிலும்

போப் பிரான்சிஸ் காலமானார்: அடுத்த போப் யார்?

கத்தோலிக்க திருச்சபையின் 266-வது போப்பாண்டவரான போப் பிரான்சிஸ் (88) காலமானார். அர்ஜென்டினாவில் ஜோர்ஜ் மாரியோ பெர்கோக்லியோ என்ற இயற்பெயருடன் பிறந்த அவர், 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது மறைவுக்கு உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாரம்பரிய போப்பாண்டவர்களைப் போல ஆடம்பர வாழ்க்கையைத் தவிர்த்து, எளிமையான முறையில் வத்திக்கானில் வசித்து வந்த போப் பிரான்சிஸ், ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களுடன் நெருக்கமாக பழகி வந்தார். விவாகரத்து பெற்ற கத்தோலிக்கர்கள் நற்கருணை உட்கொள்ள அனுமதிப்பது மற்றும் திருச்சபையில் பெண்களின் பங்கை அதிகரிப்பது போன்ற பல சீர்திருத்தங்களை அவர் கொண்டுவர முயன்றார். அதே நேரத்தில், கருக்கலைப்பு மற்றும் ஓரினச்சேர்க்கை போன்ற விஷயங்களில் மரபுவழி போக்கையே கடைப்பிடித்தார்.

உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் போன்ற பிரச்சனைகளில் அமைதியான தீர்வு காண அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவருக்குப் பின் புதிய போப்பாண்டவர் யார் என்ற விவாதங்களும் தொடங்கியுள்ளன. கானா நாட்டைச் சேர்ந்த பீட்டர் டர்க்சன், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த லூயிஸ் டாக்லே மற்றும் ஹங்கேரியைச் சேர்ந்த பீட்டர் எர்டோ ஆகியோர் அடுத்த போப்பாண்டவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாலியைச் சேர்ந்த கர்தினால் பியட்ரோ பரோலின் பெயரும் இந்தப் பட்டியலில் உள்ளது.