இந்தியா தமிழ்நாடு

இளங்கலை படிப்பு 4 ஆண்டு படித்தாலே PhD-க்கு விண்ணப்பிக்கலாம்! UGC-ன் புதிய அறிவிப்பு

  • April 22, 2024
  • 0

இளங்கலை பட்டப்பிடிப்பில் 4 ஆண்டுகள் படித்தவர்கள் நேரடியாக PhD படிக்க விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியாற்ற மற்றும் முனைவர் பட்டம் எனப்படும் PhD ஆராய்ச்சிப் படிப்பில் சேர National Eligibility Test

இளங்கலை படிப்பு 4 ஆண்டு படித்தாலே PhD-க்கு விண்ணப்பிக்கலாம்! UGC-ன் புதிய அறிவிப்பு

இளங்கலை பட்டப்பிடிப்பில் 4 ஆண்டுகள் படித்தவர்கள் நேரடியாக PhD படிக்க விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.

கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியாற்ற மற்றும் முனைவர் பட்டம் எனப்படும் PhD ஆராய்ச்சிப் படிப்பில் சேர National Eligibility Test எனப்படும் NET தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதற்கு முதுகலை பட்டமும், 55% மதிப்பெண்கள் தேர்ச்சி விகிதமும் இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியக் குழு விதி அமைத்திருந்ததது. இந்நிலையில், UGC-ன் இந்த விதிகளில் தற்போது தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 4 ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் நேரடியாக NET தேர்வுக்கு விண்ணப்பித்து, உதவி பேராசிரியார் ஆகலாம். PhD படிக்க விரும்புபவர்கள், முதுகலைப் பட்டம் பெறாமலேயே நேரடியாக NET தேர்வு எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான குறைந்தபட்ச தேர்ச்சி விகிதம், 55% மதிப்பெண்ணில் இருந்து 75% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன், SC, ST, இதர பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினர் ஆகியோருக்கு, 5% மதிப்பெண் தளர்வும் வழங்கப்படும் என்றும் UGC தெரிவித்துள்ளது.