டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி பதவியேற்க இருக்கிறார். இந்த அறிவிப்பை ஆம் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோபால் ராய் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) அன்று தெரிவித்தார். “நான் முதல்வராக இருக்கும் வரை, அரவிந்த் கேஜ்ரிவாலை மீண்டும்
டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி பதவியேற்க இருக்கிறார். இந்த அறிவிப்பை ஆம் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோபால் ராய் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) அன்று தெரிவித்தார்.
“நான் முதல்வராக இருக்கும் வரை, அரவிந்த் கேஜ்ரிவாலை மீண்டும் டெல்லியின் முதல்வராக்க வேண்டும் என்பதே எனது ஒரே நோக்கமாக இருக்கும். டெல்லி மக்களை பாதுகாக்க முயற்சிப்பேன். மேலும் கேஜ்ரிவாலின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுவேன்”, என்று முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அதிஷி கூறினார்.
அரவிந்த் கேஜ்ரிவாலின் ராஜினாமா குறித்து அதிஷி பேசுகையில், “அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்தது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. இன்று டெல்லியில் உள்ள இரண்டு கோடி மக்கள் சார்பாக நான் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், டெல்லிக்கு எப்போதும் ஒரே முதல்வர்தான், அது அரவிந்த் கேஜ்ரிவால் மட்டும்தான்”, என்றார்.
அரவிந்த் கேஜ்ரிவாலின் ராஜினாமா அறிவிப்பை தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிஷியை புதிய முதல்வராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.