இந்தியா

கள்ளச்சாராயம் காய்ச்சிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை – புதுச்சேரி துணைநிலை ஆளுநர்

  • June 20, 2024
  • 0

மேற்குவங்க மாநில உதய நாள் கொண்டாட்டம் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக துணைநிலை ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் சி. பி.

கள்ளச்சாராயம் காய்ச்சிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை – புதுச்சேரி துணைநிலை ஆளுநர்

மேற்குவங்க மாநில உதய நாள் கொண்டாட்டம் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக துணைநிலை ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன்….

தமிழகத்தில் ஏற்பட்ட விஷ சாராயம் மரணம் என்பது காவல்துறையினர் சில நேரங்களில் சமூக சிந்தனையை மறந்து விடுகிறார்கள் இதுதான் அடிப்படை காரணம் என்று குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரத்தில் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்வதை விட மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் காவல்துறையினர் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

விஷ சாராயம் குடிப்பவர்கள் தமக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறிய அவர் தற்போது ஏழை எளிய மக்கள்தான் பலியாகி இருக்கிறார்கள் கள்ளசாராயத்தை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் என்றால் கள்ளச்சாரத்தை காய்ச்சுபவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு காவல்துறையை முடிக்கி விட்டு கள்ள சாராயம் காய்ச்சுபவர்கள் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.