சினிமாவை விட்டு பல வருடம் ஆகியும், அவருடைய மவுசு குறையாமல் இருக்கும் பிரபல நடிகையை பற்றி தற்போது பார்ப்போம்.
குழந்தை பருவத்தில் இருந்து பல மொழிகளில், தன்னுடைய சுட்டித்தனமான நடிப்பால் ரசிகர்களை தன்வசப்படுத்திய நடிகை தான் ஷாலினி, இவரை பேபி ஷாலினி என்றும் அழைத்து வந்தனர். பின்னர் ஹீரோயினாக உருவெடுத்த ஷாலினி, 1997 ஆம் ஆண்டு மலையாள படம் ( அனியாதி பிராவு ) ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய இப்பட இயக்குனர் பாசில் முடிவெடுத்தார். இப்படத்திலும் ஷாலினியை ஹீரோயினாக நடிக்க வைத்தார். அந்த படம் தான் தமிழில் காதலுக்கு மாரியாதை என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தில் விஐய்க்கு ஜோடியாக தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். அப்படமும் தமிழிலும் சூப்பர் டூப்பார் ஹீட் ஆனாது. இதனால் அடுத்த படமே அஜித்துக்கு ஜோடியாக அமர்களம் படத்தில் நடிக்க ஷாலினிக்கு வாய்ப்பு கிட்டியது. அந்த சமயத்தில் இப்படமும் வெற்றி பெற்றது, அஜித்-ஷாலினி காதலும் வெற்றி பெற்றது.
பின்னர் ஷாலினி தமிழில் சில படங்களை மட்டும் நடித்து விட்டு அஜித்தை கரம்பிடித்தார். பின்னர் இல்லற வாழ்வில் நுழைய தொடங்கிய ஷாலினி, குழந்தைகள், குடும்பம் என பிசியாக இருந்த நிலையில் பல பட வாய்ப்புகளும் குவிந்தது, ஆனால் அதை அனைத்தும் நிராகரித்துவிட்டார்.
இப்படி சினிமாவை முழுவதும் விட்டு விலகி 23 ஆண்டுகள் ஆகியும் இன்று வரையும் மவுசு குறையாத நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். இவர் தமிழில் 5 படங்கள் மட்டுமே ஹீரோயினாக நடித்திருந்தார், இவர் ஒரு படத்திற்கு 50 லட்சம் சம்பளமாக வங்கி வந்ததாக கூறப்படுகிறது. இப்போது அஜித்-ஷாலினி சொத்து மதிப்பு ரூ. 300 கோடிக்கு மோல் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.