ஜனநாயக நாட்டில் இந்தியக் குடிமகனாக உள்ள யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சியை முறையாகப் பதிவு செய்து, நடத்தும் உரிமை உள்ளது. புதிதாகக் கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். கட்சி புதிதாகத் துவங்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பின்புலத்தில் யார் உள்ளார் என்பது குறித்து தற்போது சொல்ல முடியாது. கட்சியின் கொள்கையை அறிவித்து மக்களைச் சந்திக்கும் போதுதான் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பது தெரியும்.
தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியில் எந்தப் பாதிப்பும் இல்லை. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் துவக்கி வைத்து மக்களைச் சந்தித்து வருகிறார். குறிப்பாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்து வருகிறார். நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலிலும் அது பிரதிபலிக்கும். நல்லாட்சிக்கு மக்கள் நல்ல தீர்ப்பு அளிப்பார்கள். கல்வி என்பது அறிவியல் சார்ந்த பகுத்தறிவு சிந்தனையோடு இருக்க வேண்டும். கல்விக்கூடத்தில் பழமைவாத சித்தாந்தங்களை பா.ஜ.க மட்டுமே தொடர்ந்து புகுத்தி வருகிறது. மகா விஷ்ணு விவகாரத்தில் தமிழக அரசு விரைவாகச் செயல்பட்டு உரிய நடவடிக்கையும் எடுத்துள்ளது.