கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் அடிக்கடி நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் கேரள மாநிலம் மத்திய மலப்புறம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தொடர் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இவர் பெங்களூருவில் இருந்து கேரளா திரும்பியவர் ஆவார். காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றபோது அவர் திடீரென உயிரிழந்தார். இதையடுத்து அவரது ரத்த மாதிரிகள் எல்லாம் கைப்பற்றப்பட்டு கோழிக்கோடு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதேபோல் அவரது எச்சில் மாதிரிகள் உணவில் உள்ள வைராலஜி ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாலிபரின் வீட்டிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் செம்பரத்தி பகுதி உள்ளது இங்குதான் அண்மையில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருந்தான். எனவே இந்த வாலி வரும் நிபா வைரம் பாதிப்புக்கு உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது . இதனைத் தொடர்ந்து மத்திய மலப்புறம் தென்பட்டன. இதை எடுத்து அவர்கள் மஞ்சேரி மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். தற்போது சந்தேகத்தின் பேரில் சுமார் 150 பேரை நிபா வைரஸ் கண்காணிப்பில் வைத்துள்ளனர். இவர்கள் நிபா வைரசால் உயிரிழந்த வாலிபர் மற்றும் நிர்வாக வைரஸ் தொற்று காணப்படும் இரண்டு நபர்களுக்கு மிக நெருக்கமாக இருந்தவர்கள் ஆவார்கள். இதற்கிடையே திருவலி பஞ்சாயத்தில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரள சுகாதாரத்துறை முகக் கவசம் அணிவதை கட்டாயப்படுத்தி உள்ளது.
இது மட்டும் இன்றி இன்று காலையில் பஞ்சாயத்து மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் வரும் நாட்களில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பரிசோதனைகளை தீவிர படுத்தவும் பரிசோதனை மாதிரிகளை உணவில் உள்ள வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு தொடர் காய்ச்சல் தலைவலி வயிற்றுப்போக்கு மற்றும் இருமல் போன்றவை இருந்தால், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என கூறப்பட்டுள்ளது.