இந்தியா சினிமா

‘காவாலா’ டான்ஸ் மாஸ்டர் தலைமறைவு

  • September 18, 2024
  • 0

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு டான்ஸரான இளம்பெண் அளித்த புகாரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதையடுத்து டான்ஸ் மாஸ்டர் தலைமறைவாகியுள்ளார்.

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு டான்ஸரான இளம்பெண் அளித்த புகாரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதையடுத்து டான்ஸ் மாஸ்டர் தலைமறைவாகியுள்ளார். இவர் நடனம் அமைத்த ‘புட்ட பொம்மா’, ‘காவாலா’, ‘அரபிக் குத்து’ ஆகிய பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து துணை கமிஷனர் ஸ்ரீனிவாஸ் கூறியிருப்பதாவது: பெண் புகாரை முழுமையாக பதிவு செய்துள்ளோம். மருத்துவ பரிசோதனைக்கு அந்த பெண்ணை அனுப்பியுள்ளோம். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜானி மாஸ்டர் தலைமறைவாக உள்ளார். சம்பவம் நடந்த போது புகார் தந்த பெண்ணின் வயது 18 வயதை பூர்த்தியடையவில்லை. எனவே அதுகுறித்து விசாரணை நடத்தி ஜானி மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுமா என்பது தெரியவரும் என தெரிவித்துள்ளார்.