பிரசாந்த் நடிகர் பிரசாந்த்தின் ‘அந்தகன்’ திரைப்படம் வரும் ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.இந்தியில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த ‘அந்தகன்’ படத்தில் கே.எஸ். ரவிக்குமார், சிம்ரன்,
பிரசாந்த் நடிகர் பிரசாந்த்தின் ‘அந்தகன்’ திரைப்படம் வரும் ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்தியில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த ‘அந்தகன்’ படத்தில் கே.எஸ். ரவிக்குமார், சிம்ரன், ஊர்வசி, மனோபாலா, சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த், யோகி பாபு உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் வெளியீட்டையொட்டி ‘Andhagan Anthem’ பாடல் வெளியீட்டு விழா (Andhagan Anthem Launch) நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் விஜய் இப்பாடலை வெளியிடும் காணொலி ஒளிபரப்பப்பட்டது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்பாடலை அனிருத் பாடியுள்ளார். இரண்டு இடத்தில் விஜய் சேதுபதி குரல் கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில் இவ்விழா மேடையில் பேசிய நடிகர் பிரசாந்த், “இந்த ‘அந்தகன்’ படத்தோட ‘The Andhagan Anthem’ ப்ரோமோ பாடலை வெளியிட்ட தளபதி விஜய் அவர்களுக்கு நன்றி. இந்தப் பாடலை இயக்கிக் கொடுத்த பிரபுதேவா மாஸ்டருக்கும், சாண்டி மாஸ்டருக்கும் நன்றி. பாடலைப் பாடிய அனிருத்திற்கும், விஜய் சேதுபதிக்கும் நன்றிகள். ஒரு ப்ரோமோ பாடலை இவ்வளவு பெரிதாகப் பண்ண முடியும் என்று காட்டியுள்ளனர். இதற்காகப் பணியாற்றிய அனைவருக்கும் எனது நன்றிகள்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக ஒரு ஃபோன் கால்தான் பண்ணேன் கார்த்திக், கே.எஸ். ரவிக்குமார், சிம்ரன், ஊர்வசி, மனோபாலா, சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த், யோகி பாபு என எல்லோரும் வந்துவிட்டனர். என் மீதும், என் அப்பா மீதும் இவ்வளவு அன்பு வைத்துள்ளீர்கள். படக்குழு அனைவரும் அழைத்ததும் வந்துவிட்டனர். அதற்காக அனைவருக்கும் எனது நன்றிகள். பிரபுதேவா, சாண்டி மாஸ்டர், கலா மாஸ்டர் மூவரும் இப்படத்தின் பாடலுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றியிருக்கின்றனர்.
பிரசாந்த் எங்கள் எல்லோரது உழைப்பிலும் ‘அந்தகன்’ படம் நன்றாக வந்திருக்கிறது. என் மீதும் அன்பு வைத்து என்னை ஆதரித்து வரும் ரசிகர்களுக்கு எனது நன்றிகள். விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது. நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்று நெகிச்சியாகப் பேசியிருக்கிறார்.