சினிமா தமிழ்நாடு

கார்த்திக் சுப்புராஜின் புதிய படத்தில் ஜெயம் ரவி?

  • September 11, 2024
  • 0

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவை வைத்து ‘S44’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 50%க்கும் மேல் முடிவடைந்துள்ளது. அதேசமயம், கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படத்திற்கான பணிகளையும் தொடங்கியுள்ளார். அதாவது, அடுத்த படத்திற்கான கதையை ஜெயம்

கார்த்திக் சுப்புராஜின் புதிய படத்தில் ஜெயம் ரவி?

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவை வைத்து ‘S44’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 50%க்கும் மேல் முடிவடைந்துள்ளது. அதேசமயம், கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படத்திற்கான பணிகளையும் தொடங்கியுள்ளார். அதாவது, அடுத்த படத்திற்கான கதையை ஜெயம் ரவியை சந்தித்து கூறியுள்ளார். அந்த கதை அவருக்கு பிடித்ததால், அதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஜெயம் ரவி. தற்பொழுது ‘பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.