அரசியல் தமிழ்நாடு

ஆளுநர் ஆர்.என்.ரவி உளருகிறார் – வைகோ

  • September 15, 2024
  • 0

பேரறிஞர் அண்ணாவின் 116 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில், அக்கட்சின் பொதுச் செயலாளர் வைகோ கட்சிக் கொடி ஏற்றி வைத்தார். அங்குள்ள அண்ணாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம்

ஆளுநர் ஆர்.என்.ரவி உளருகிறார் – வைகோ

பேரறிஞர் அண்ணாவின் 116 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில், அக்கட்சின் பொதுச் செயலாளர் வைகோ கட்சிக் கொடி ஏற்றி வைத்தார். அங்குள்ள அண்ணாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “திராவிட இயக்கத்தை சாய்க்க சங் பரிவார் அமைப்புகள் எவ்வளவு முயற்சி செய்தாலும் அது முடியாது. கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் எதிர்பாராத திட்டங்களை தந்து கட்சியையும் சிறப்பாக வழி நடத்தி வருகிறார். தேசிய அளவில் அவரது முக்கியத்துவம் உயர்ந்துள்ளது.

அமெரிக்காவுக்கு சென்று 7,000 கோடி மதிப்பிலான முதலீடுகளை திரட்டி வந்துள்ளார். திராவிடர் கழகமும், திமுகவும் இணைந்து செயல்படுவது போல, திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் எந்த இடையூறு வந்தாலும், அதை தடுக்கின்ற போர்வாளாக மதிமுக இயங்கும். கூட்டணி என்பதை தாண்டி திராவிட இயக்கத்தை காக்க இந்த பணியை செய்தாக வேண்டும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து மாநிலப் பாடத் திட்டம் மோசமானது என ஆளுநர் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “தமிழ்நாட்டில் இருப்பது போல ஒரு மோசமான ஆளுநர், வேறு எந்த மாநிலத்திலும் இருந்தது இல்லை. ஆளுநர் ஆர்.என்.ரவி தினமும் எதையாவது உளறி வருகிறார். இதனால் தான் ஆளுநர் பதவியையே அகற்ற வேண்டும் என்று நாங்கள் சொன்னோம். ஆளுநர் பதவியே தேவையில்லை என்று அண்ணா சொன்னார்.

தமிழகத்தில் இருக்கும் ஆளுநரைப் போல தற்கூறி வேறு யாரும் கிடையாது. ஏற்கனவே இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்த்து மதிமுக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டது. தற்போது தேவை வந்தால் ஆளுநர் மாளிகையை மீண்டும் முற்றுகையிட தயாராக உள்ளோம்” என்று அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.